முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகள் திடீர் ரத்து
முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, கடந்த 4ம் தேதி பதவியேற்றார். அதன்பின், தலைமை செயலகம் வரவில்லை. நேற்று அவர், தலைமை செயலகம் வருவார் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால், தலைமை செயலகத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா மற்றும் உயர்கல்வித் துறை சார்பில், கல்லுாரி பேராசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்கேற்ற வகையில், முதல்வரை வரவேற்று, கடற்கரை சாலையில், வழிநெடுகிலும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன. பிற்பகல் 2:55 மணிக்கு, முதல்வர் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு, தலைமை செயலகம் வருவார் என்றும், அறிவிக்கப்பட்டது; போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆனால், திடீரென, முதல்வர் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதற்காக, அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.