!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 13 ஜூலை, 2015

ஊதிய உயர்வு கோரிக்கைக்கு அரசு தடை:ஊழியர்கள் அதிர்ச்சி
எட்டாவது ஊதிய மாற்றம் செயல்படுத்தும் வரை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை ஊழியர்கள் வைக்க வேண்டாம் என அரசு கேட்டு கொண்டுள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2006 ஜன.,1 முதல் 7 வது ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டது. இதில் பல முரண்பாடுகள் இருப்பதாக கூறி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அதிலும் சில முரண்பாடுகள் இருப்பதாக கூறியதை அடுத்து, 3 நபர் குழு அமைக்கப்பட்டு 89 அரசாணைகள் வெளியிடப்பட்டன.

மீண்டும் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்காக 7 வது ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழகத்திலும் 8 வது ஊதிய மாற்றம் செய்யப்பட உள்ளது. அதுவரை ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்த வேண்டாம் என, நிதித்துறை கேட்டு கொண்டுள்ளது. அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அரசின் அறிவிப்பு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22 ல் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம், ஆக., 22 ல் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த உள்ளோம், என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png