!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 5 ஜூலை, 2015

கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை கலைக்க முடிவு?

மிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 10க்கும் மேற்பட்டவை காலியாக இருந்தும், அவை நிரப்பப்படாமல் இருப்பதால், அப்பணியிடங்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் பரவியுள்ளது.கல்வி அலுவலகங்கள்தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மேலாண்மை செய்யும் வகையில், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில், கல்வி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கல்வி மாவட்ட அளவில், உயர்நிலை கல்வி வரை, கண்காணிக்க, மாவட்டக்கல்வி அலுவலரும், வருவாய் மாவட்ட அளவில், அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொறுப்பாக, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணிஇடங்களும் உள்ளனர்.மத்திய அரசின் திட்டமான அனைவருக்கும் கல்வி இயக்க பணிகளையும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரே கவனித்து வந்தனர்.

இதனால், வேலைப்பளு அதிகரித்துள்ளதாக கோரிக்கை எழுந்த நிலையில், கூடுதல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.மாநிலத்தில் மேலும் 32 முதன்மைக்கல்வி அலுவலர், பதவி உயர்வு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இதனால், 64 பணியிடங்களாக அதிகரித்தது. இதில், ஓய்வு பெறுவோர் மற்றும் பதவி உயர்வு பெறுவோரின் பணியிடங்களை, அடுத்தடுத்த பதவி உயர்வு மூலம், நிரப்பப்பட்டு வந்தது.ஆனால், சமீப காலமாக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், நிதி ஒதுக்கீடு, ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது.

இதனால், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்களை, 'கலைக்க' முடிவு செய்துள்ளதாக, அலுவலர்களிடையே தகவல் பரவியுள்ளது.இதற்கேற்ப, நடப்பு கல்வியாண்டில், 10க்கும் மேற்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடமே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கல்வியாண்டு துவக்கத்தில் வழங்கப்படும் பதவி உயர்வு, இப்போது வரை வழங்கப்படவில்லை.இந்த நிலையை அடுத்த ஆண்டு வரை, கடைபிடிக்கும் பட்சத்தில், கூடுதல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்களை முற்றிலும் கலைக்கும் வகையில், எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால், நடப்பு கல்வியாண்டில், சி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கும் என, எதிர்பார்த்து காத்திருந்த, மாவட்டக்கல்வி அலுவலர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், திட்ட நிதி ஒதுக்கீடும், வேலைப்பளுவும் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், ஒரு மாவட்டத்தில், இரு சி.இ.ஓ.,க்கள் இருப்பதால், 'ஈகோ' காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால், இனி கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை நிரப்பப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வாய்ப்பில்லை:பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறும் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் விடும் போது, கூடுதல் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிடும். 64 ஆக உள்ள, சி.இ.ஓ., பணியிடங்களை, 32 ஆக குறைக்க முடிவு செய்யும் பட்சத்தில், அடுத்த ஆண்டு வரை, சி.இ.ஓ., பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png