!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 1 ஜூலை, 2015

அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது! முதல் நாளில் 415 பேர் ஆர்வத்துடன் பங்கேற்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதல் நாளில் சிறப்பு பிரிவு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வில் 415 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


கடலூர் மாவட்டத்தில், கடலூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவிலில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகிறது. அதில், கடலூர், செம்மண்டலத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலேயே பெண்களுக்கான தொழிற் பயிற்சி நிலையம் தனியாக செயல்பட்டு வருகிறது.இதில், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், பிளாஸ்டிக் பிராசசிங் ஆபரேட்டர், மெக்கானிக் மோட்டார் வாகனம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராம் உதவியாளர், ஒயர்மேன், வெல்டர் (காஸ் மற்றும் எலக்ட்ரிக்), எலக்ட்ரீஷியன் பிரிவுகளிலும், மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வரைவாளர் (மெக்கானிக்கல்), வரைவாளர் (சிவில்), எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் பராமரிப்பு, சுருக்கெழுத்து ஆங்கிலம் மற்றும் தமிழ், தையல், எம்ப்ராய்டரி மற்றும் ஊசி வேலைகள் ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், வெல்டர் மற்றும் ஒயர்மேன் ஆகிய பிரிவுகளுக்கு மட்டும் 8ம் வகுப்பு தேர்ச்சியும், பிற பிரிவுகளுக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

கடலூர் மற்றும் சிதம்பரம் அரசு ஐ.டி.ஐ.,களில் படிப்பவர்களுக்கு மத்திய அரசின் என்.சி.வி.டி., சான்றிதழும், காட்டுமன்னார்கோவிலில் படிப்பவர்களுக்கு மாநில அரசின் எஸ்.சி.வி.டி., சான்றிதழும் வழங்கப்படுகிறது.நான்கு ஐ.டி.ஐ.,களில் உள்ள 1,140 இடங்களில் இதர பிரிவினருக்கு 23, சிறப்பு (மாற்றுத் திறனாளி, விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்றோர்) பிரிவு 268, பிற்படுத்தப்பட்டோர் பொது 169, பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் 45, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) 28, மிகவும் பிற்பட்டோர் 119, மிகவும் பிற்பட்டோர் பெண்கள் 31, ஆதிதிராவிடர் 148, ஆதிதிராவிடர் பெண்கள் 46, ஆதிதிராவிடர் (அருந்ததியர்) 30, பழங்குடியினர் பிரிவினருக்கு 12 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள 4 ஐ.டி.ஐ.,களில் உள்ள 1,140 இடங்களில் 2015-16 கல்வி ஆண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு கடலூர், செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேற்று துவங்கியது. ஐ.டி.ஐ., முதல்வர்கள் கடலூர் சையத்சலீம், சிவகாமி, சிதம்பரம் ரவிச்சந்திரன் (பொறுப்பு), காட்டுமன்னார்கோவில் திருநாவுக்கரசு (பொறுப்பு), நிர்வாக அலுவலர் பழனிவேல், முருகேசன் ஆகியோர் கலந்தாய்வை நடத்தினர்.

முதல் நாளான நேற்று சிறப்பு பிரிவில் 15 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களில் 6 பேருக்கு தகுதியின் அடிப்படையில் சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து 8ம் வகுப்பு தகுதியுடைய வெல்டர், ஒயர்மேன் ஆகிய பிரிவுகளில் உள்ள 272 இடங்களுக்கான கலந்தாய்வு நடந்தது. நேற்று மட்டும் 400 பேர் பங்கேற்றனர். வெல்டர் மற்றும் ஒயர்மேன் பிரிவுகளுக்கான கலந்தாய்வு இன்றும் நடக்கிறது.பிற பிரிவுகளுக்கான கலந்தாய்வு நாளை (2ம் தேதி) முதல் 6ம் தேதி வரை நடக்கிறது. அதன் பின்னர் காலியிடங்கள் இருப்பின் அதற்கான கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png