!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 25 ஜூலை, 2015

மாணவர்களுக்கு பதில் பெற்றோர் மருத்துவ கலந்தாய்வில் அனுமதி

மருத்துவ படிப்புக்கான, தேசிய மறு நுழைவுத்தேர்வு இன்று நடப்ப தால், மாநில கலந்தாய்வில், மாணவர்களுக்கு பதில், பெற்றோர் பங்கேற்கலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.மத்திய ஒதுக்கீட்டின் கீழ், மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய நுழைவுத்தேர்வு, மே 3ம் தேதி நடந்தது. இதில், அரியானா உட்பட, சில மாநிலங்களில், சில மாணவர்கள் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை ரகசியமாக பயன்படுத்தி, விடைகளை வெளியே இருந்து பெற்று, தேர்வு எழுதியதாக குற்றச்சாட்டு எழுந்தது.எனவே, மறுதேர்வு நடத்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, இன்று மறு நுழைவுத்தேர்வு நடக்கிறது; இதில், தமிழகத்தில் இருந்து, 23 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.அதே நேரத்தில், தமிழகத்தில், மருத்துவ படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது; இன்று, கலந்தாய்வு நிறைவடை
கிறது. தேசிய மறு நுழைவுத்தேர்வு எழுதுபவர்கள், கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்பதால், மாணவர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறியதாவது:தேசிய மறு நுழைவுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர் பாதிக்கக் கூடாது என்பதால், இன்று, அவர்களின் பெற்றோர் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மாணவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதியுடன், முகவரி, அடையாள சான்றுடன் பங்கேற்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png