!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 21 ஜூலை, 2015

பெட்ரோல் நிலையங்களுக்கு அருகே பள்ளிகள் கூடாது:  திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


பெட்ரோல் நிலையங்களுக்கு அருகே பள்ளிகளை அமைக்கக் கூடாது, பள்ளிகளில் சேர்ப்பதற்கு குழந்தைகளுக்கு எழுத்து-வாய்மொழித் தேர்வுகளை நடத்தக் கூடாது என்பன போன்ற திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்ட மழலையர் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் சில அம்சங்கள் இப்போது கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 
 இதுகுறித்து, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்:
 மழலையர் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க, எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு போன்ற எந்த வகையான தேர்வுகளையும் நடத்தக் கூடாது.
 தமிழக பள்ளிக்கல்வித் துறையிடம் ஏற்கெனவே அனுமதி பெற்று இயங்கி வரும் மழலையர் பள்ளிகளுக்கும் புதிதாக வகுக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும். எனவே, அந்த நெறிமுறைகளை உத்தரவு அமலான ஆறு மாதங்களுக்குள் பின்பற்ற வேண்டும்.
 மழலையர் பள்ளிகள், தங்களுக்குக் கிடைத்த அனுமதிக்கான உத்தரவு எண், உத்தரவு பெறப்பட்ட தேதி ஆகியவற்றை தகவல் பலகையாக வைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பள்ளிகளுக்கான அனுமதியை புதுப்பிக்க வேண்டும்.
 மழலையர் பள்ளிகளை பெட்ரோல் நிலையங்களுக்கு அருகே அமைக்கக் கூடாது. குறிப்பாக, பெட்ரோல் நிலையங்களுக்கு 100 மீட்டருக்குக் குறைவான தூரத்தில் பள்ளிகள் இருக்கக் கூடாது. மழலையர் பள்ளிகளுக்கான மைதானங்களில் கண்காணிப்புக் கேமிராக்களை பொருத்த வேண்டும்.
 பள்ளி நுழைவு வாயில்களில் பாதுகாப்புக்கான நபர்கள் அல்லது பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற வேண்டும். புகைப்பிடிக்கவும், மது அருந்தவும், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும் தடை செய்யப்பட்ட பகுதி என்ற சிறு விளம்பரத் தட்டிகளை வைக்க வேண்டும்.
 பள்ளி வளாகங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் போன்ற வெடிக்கும் தன்மையுள்ள பொருள்களை சேமித்து வைக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png