'ரூபாயில் எழுதாதீங்க'; ரிசர்வ் வங்கி
'ரூபாய் நோட்டுகளில் எழுதினால், கள்ள நோட்டுகளுக்கும், உண்மையான நோட்டுகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது' என, பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரூபாய் நோட்டுகளில் வெள்ளையாக இருக்கும் பகுதியில், பொதுமக்களும், நிறுவனங்களும், நம்பர், பெயர் மற்றும் தகவல்களை எழுதுகின்றனர். கள்ள நோட்டுகளுக்கும், உண்மையான ரூபாய் நோட்டுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை, அந்த வெள்ளை பகுதியில் உள்ள பாதுகாப்பு குறியீடு மூலமாகவே கண்டுபிடிக்க முடியும். அதில் எழுதிவிட்டால், வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாது. எனவே, பொதுமக்களும், நிறுவனங்களும் ரூபாய் நோட்டுகளில் எழுத வேண்டாம். இவ்வாறு, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.