!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 24 ஜூலை, 2015

தகராறில் ஈடுபட்ட மாணவன் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

'மதுரையில் பொறியியல் கல்லூரியில் சக மாணவர்களிடம் கோஷ்டி தகராறில் ஈடுபட்டதாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட மாணவன், படிப்பை தொடர அனுமதிக்க முடியாது' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை டி.வி.எஸ்.லட்சுமி நகர் ராஜாராம் தாக்கல் செய்த மனு: எனது மகன் மதுரை விரகனூர் வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ., இரண்டாம் ஆண்டு படித்தார். மாணவர்களிடம் கோஷ்டி தகராறில் ஈடுபட்டதாகக்கூறி அவரை நிர்வாகம் 'சஸ்பெண்ட்' செய்தது.கல்லூரி முதல்வர் உத்தரவில், 'கல்லூரியில் மாற்றுச் சான்று (டீ.சி.,) பெற்றுச் செல்லவும். இல்லை எனில் பதிவுத் தபாலில் அனுப்புவோம்' என்றார்.இதை ரத்து செய்து மகனை கல்லூரியில் தொடர்ந்து படிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன்: மனுதாரரின் மகன் மற்ற மாணவர்களுடன் கடுமையாக தகராறில் ஈடுபட்டுள்ளார். வெளியாட்கள் உதவியுடன் சில மாணவர்களை தாக்கி உள்ளார். அவரது நடத்தை கண்டிக்கத்தக்கது. இதனால் கல்லூரியின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனக் கருதி 'சஸ்பெண்ட்' செய்து, விளக்கம் கோரி 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மனுதாரர், அவரது மகன் பங்கேற்றுள்ளனர்.
'மனுதாரர் மகன் கல்லூரியில் படிப்பது அவருக்கும், கல்லூரி நலனுக்கும் உகந்ததல்ல' என ஒழுங்கு நடவடிக்கைக்குழு தெரிவித்து உள்ளது.சுவாமி புருஷோத்தமானந்தாவின் போதனையில், 'இளைஞர்கள் முன் எல்லையற்ற வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அறிவை மேம்படுத்தி வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. இளைஞர்களுக்கு உடல், மூளை பலம், ஆர்வம், எல்லையற்ற படைப்பாற்றல் உள்ளது. ஆனால் தங்கள் பலத்தை உணரவில்லை எனில் எல்லாமே பயனற்றதாகிவிடும்' என்றார்.'சமூக விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும்' என அண்ணா பல்கலை வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது. அதன்படி கல்லூரி ஒழுங்கு நடவடிக்கைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பருவத் தேர்வு முடிந்ததும் சான்றிதழ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் ஒப்புதல் அளித்துள்ளனர்.இந்நிலையில், இங்கு மனு தாக்கல் செய்தது ஏற்புடையது அல்ல. மனுவை தள்ளுபடி செய்கிறேன், என்றார்.அரசு வழக்கறிஞர் ஆர்.ஆனந்தராஜ், அண்ணா பல்கலை வழக்கறிஞர் எம்.ராஜராஜன் ஆஜராகினர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png