!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 9 ஜூலை, 2015

கோவை அருகே மது அருந்திவிட்டு தடுமாறி விழுந்த பள்ளி மாணவியை போலீஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, சாய்பாபா காலனி அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் நேற்று, துடியலூர் அருகே நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அங்கிருந்த போலீஸார் மாணவியை மீட்டு விசாரித்துள்ளனர். அப்போது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.
போலீஸார் கூறும்போது, ‘அவர் பள்ளிக்குச் செல்லாமல், பள்ளிச் சீருடையிலேயே பீளமேடு அருகில் உள்ள வணிக வளாகத்துக்கு வந்துள்ளார். அங்கு குளிர்பானத்தில் மது கலந்து அருந்தியுள்ளார். அங்கேயே நிலை தடுமாறிய நிலையில் அவர் காணப்பட்டுள்ளார். அவரை நண்பர்கள் இரு சக்கர வாகனத்தில் அமரவைத்து பாதுகாப்பாக அழைத்து வந்தபோது, சாலையில் விழுந்துவிட்டார்.
பள்ளி மாணவி ஒருவர் இதுபோல மீட்கப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளிச் சீருடையில் அவர் வெளியே வந்துள்ளதால், இதில் பள்ளிக்கு பொறுப்பு உள்ளது. பெற்றோர், ஆசிரியர்களிடையே ஏற்படும் இடைவெளி, அழுத்தம் உள்ளிட்டவையே அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கக்கூடும். மனநல ஆலோசனை வழங்கும்படி மாணவியின் பெற்றோரிடம் அறிவுறுத்தி அனுப்பியுள்ளோம்’ என்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png