!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 24 ஜூலை, 2015

ஓய்வூதிய மனு நிராகரிப்பா?: தகவல் தெரிவிக்க உத்தரவு
முதியோர் ஓய்வூதிய விண்ணப்பங்கள், தகுதியற்றதாக கருதப்பட்டால், சம்பந்தப்பட்டவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், ஓய்வூதியம் வழங்குவதில், தமிழகம் முன்னணியில் உள்ளது.
ஆண்டுதோறும், 31 லட்சம் பேருக்கு, ஓய்வூதியமாக, 4,198 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறுவோருக்கு, அத்தொகை முழுமையாக, விரைவாக சென்றடைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை சார்பில், மாநிலம் முழுவதும், சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்த, மண்டல அளவிலான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.முதற்கட்டமாக, மதுரை மற்றும் திருச்சியில் பயிற்சி முகாம் நடந்தது. நேற்று, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த, உதவி கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர்கள் உதயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர், பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தனர்.அப்போது, 'ஓய்வூதியம் கோரி வரும் விண்ணப்பங்களை, கவனமாக பரிசீலிக்க வேண்டும். அவை தகுதியற்றதாக கருதப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டால், உடனடியாக அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png