!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

பள்ளி மாணவர்கள் இடையே மோதல்: 12 பேர் 'டிஸ்மிஸ்'
மாணவர்கள் மோதல் காரணமாக, விடுமுறைக்கு பின், திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி நேற்று, போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. 12 மாணவர்கள், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்; ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

கடலுார், திருவந்திபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் திருவந்திபுரம் மற்றும் பில்லாலி கிராம மாணவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக, திருப்பாதிரிப்புலியூர் போலீசில் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த, 17ம் தேதி, திருவந்திபுரம் மற்றும் சாலக்கரை மாணவர்களை பில்லாலி மாணவர்கள் தாக்கினர். தடுக்க முயன்ற தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியரும் தாக்கப்பட்டனர்.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, திருவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மாணவர்களையும், பில்லாலி பகுதியைச் சேர்ந்த ஏழு மாணவர்களையும் கைது செய்து, சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாணவர்கள் மோதல் தொடர்பாக, பள்ளி ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடந்தது. அதில், போலீசாரால் கைது செய்யப்பட்ட, 12 மாணவர்களையும் பள்ளியில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்யவும், மோதலுக்கு துணையாக இருந்த, மூன்று மாணவர்களை செப்., 17ம் தேதி வரை, 'சஸ்பெண்ட்' செய்யவும் முடிவு செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்
களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக, ஆசிரியர்களிடம் சி.இ.ஓ., இரண்டு நாள் விசாரணை நடத்தினார். பிரச்னை தொடர்பாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் கனிகண்ணனை, மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து, உத்தரவிட்டார். இந்நிலையில், பள்ளி நேற்று திறக்கப்பட்டது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png