பிளஸ்–2 செப்டம்பர் மாத தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு
அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:–
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், மேலும் தனித்தேர்வர்கள் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கும் பிளஸ்–2 தேர்வுக்கு உரிய கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–
செப்டம்பர் 28–ந்தேதி –தமிழ் முதல் தாள்
29–ந்தேதி –தமிழ் 2–வது தாள்
30–ந்தேதி –ஆங்கிலம் முதல்தாள்
அக்டோபர் 1–ந்தேதி – ஆங்கிலம் 2–வது தாள்
3–ந்தேதி – இயற்பியல், பொருளாதாரம்
5–ந்தேதி – கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசன் டயட்டிக்ஸ்
6–ந்தேதி – வணிகவியல், மனைஅறிவியல், புவியியல்
7–ந்தேதி –வேதியியல், அக்கவுண்டன்சி
8–ந்தேதி –உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்
9–ந்தேதி – கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்
10–ந்தேதி – அனைத்து தொழில் தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்
இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பகல் 1–15 மணிவரை நடக்கிறது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.