பள்ளிகள் கோவில்கள் அருகே உள்ள 3 ஆயிரம் மதுக்கடைகளை மூட உள்வுத்துறை சிபாரிசு
தமிழ்நாட்டில் மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
அரசியல் கட்சிகள் மட்டு மின்றி மாணவ-மாணவி களும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராட் டத்தில் குதித்துள்ளனர். காந்தியவாதி சசிபெரு மாள் மதுக்கடையை மூடும் போராட்டத்தில உயிரிழந்தார். சேலம் வாழப்பாடியில் மதுக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கடை விற்பனையாளர் செல்வம் பரிதாபமாக இறந்தார். மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்த திடீரென பலர் வருவதால் அனைத்து மதுக்கடைகளுக்கும் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது
. அரசியல் கட்சிகள் மட்டு மின்றி மாணவ-மாணவி களும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராட் டத்தில் குதித்துள்ளனர். காந்தியவாதி சசிபெரு மாள் மதுக்கடையை மூடும் போராட்டத்தில உயிரிழந்தார். சேலம் வாழப்பாடியில் மதுக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கடை விற்பனையாளர் செல்வம் பரிதாபமாக இறந்தார். மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்த திடீரென பலர் வருவதால் அனைத்து மதுக்கடைகளுக்கும் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது
இந்த நிலையில் மது விலக்கு ஆயத்தீர்வை துறையை கவனிக்கும் உள்துறை செயலாளர் அபூர்வவர்மா போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் டி.ஜி.பி. அசோக் குமார், உளவுப்பிரிவு ஐ.ஜி. டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுதலங்கள், ஆஸ்பத்திரி பகுதிகளில் எத்தனை மதுக்கடை உள்ளன என்று, பட்டியலிட்டு அறிக்கையாக அளித்துள்ளனர். இதில் சுமார் 3 ஆயிரம் கடைகள் இடம் பெற்றுள்ளன. மதுக்கடைகளை குறைப்பது பற்றி அரசு முடி வெடுத்தால் தமிழ்நாட்டில் உள்ள 6250 மதுக்கடைகளில் சுமார் 3 ஆயிரம் கடைகளை மூடலாம் என்பதற் கேற்ப இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந் தால் மதுவிலக்கை அமுல் படுத்துவோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளதால், அதற்கு முன்பாகவே முதல்-அமைச்சர் ஜெயலலிதா மதுக்கடைகளை மூடுவது பற்றி முக்கிய அறிவிப்பை வருகிற 15-ந்தேதி சுதந்திர தின கொடியேற்று விழாவில் அறிவிப்பார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
முதற்கட்டமாக பள்ளி கல்லூரி வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள கடைகளை மூடும் அறிவிப்பு வெளியாவதுடன் டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரத்தை பகல் 2 மணியில் இருந்து இரவு 9 மணி வரை குறைக்கும் அறிவிப்பும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு 6 மாத கால அவகாசம் கொடுத்து அனைத்து டாஸ்மாக் கடை களையும் மூடுவதற்கான அறிவிப்பும் வெளியாகலாம் என தெரிகிறது. மதுக்கடைகள் படிப்படி யாக குறைக்கப்படும் போது உயர்ரக மதுபான ‘எலைட்’ மதுபானக்கடைகள் மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என தெரிகிறது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.