!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

மத்திய அரசின் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிம்மதி : மனைவி, குழந்தை சொத்து கணக்கு தேவையில்லை
லோக்பால் சட்டம், 44ம் பிரிவின்படி, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை, வருமான வரித் துறையிடம், அதற்கான படிவங்களில் முறைப்படி அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கும் போது தன் மனைவி அல்லது கணவரது வருமானம் மற்றும் சொத்து விவரங்களையும் அளித்தாக வேண்டும்.


தொழில்கள் மூலமாக...:




அதாவது, அரசு சம்பளம் பெறும் ஒருவரது மனைவி மற்றும் குழந்தைகள், தனியார் துறைகளில் பணியில் இருக்கலாம் அல்லது சொந்த தொழில்கள் மூலமாக வருமானம் ஈட்டலாம். அந்த வருமானம் மூலமாகவும், அரசு ஊழியர் சொத்துகளை வாங்கியிருக்கக் கூடும். தற்போதுள்ள சட்டத்தின் படி இந்த சொத்துகளும், வருமானமும் கூட, அரசுக்கு கணக்கு காட்டப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம், அரசு ஊழியர்கள், தங்களது குடும்பத்தின் வருமானம், சேமிப்பு, அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை, வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்தாக வேண்டும். இந்த விவரங்கள், இணையதளத்திலும் வெளியிடப்படும் நிலை உள்ளது.இந்த விதிமுறை, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களிடையே எதிர்ப்பை யும், அதிருப்தியை-யும் ஏற்படுத்தியுள்ளது.


மத்திய அரசு ஊழியர்கள் கூறுவதாவது: லோக்பால் விதிமுறையால், எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.


அதிகாரம் இல்லை:




எங்கள் குடும்பத்தினரின் சொத்து விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதன் மூலம் தவறான
செய்திகள் பரவுகின்றன. சொத்து விவரங்களை வெளியிட, வருமானவரித் துறைக்கே கூட அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்க, லோக்பால் சட்டத்தின் மூலம் சொத்துகள் பகிரங்கப்படுத்தப்படுவது, தனிநபர் உரிமையை பாதிக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறுகின்றனர்.இதற்கு தீர்வாக, லோக்பால் சட்டத்தில் எத்தகைய திருத்தம் கொண்டு வரலாம் என பரிந்துரைக்கும் படி, பார்லிமென்ட் நிலைக் குழுவுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, பார்லிமென்ட் நிலைக்குழு ஆலோசனை நடத்தி, முக்கிய பரிந்துரைகளை அரசிடம் அளித்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், தங்களது சொந்த வருமானம், சேமிப்பு, சொந்த வருமானத்தின் வாயிலாக வாங்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களை மட்டும் அளித்தால் போதும்.


பரிந்துரை:




குடும்பத்தினரின் வருமானமோ, சேமிப்போ, சொத்துகளோ கூறப்பட தேவையில்லை என, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை, மத்திய அரசு பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கான பார்லி மென்ட் நிலைக்குழுத் தலைவர், சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்கள், அரசுக்கு தெரிவிக்க வேண்டிய தங்களின் சொத்துக் கணக்கு விவரத்திலிருந்து, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்காக, 'லோக்பால்' சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. வரும் பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த பரிந்துரை சட்டமாக உள்ளது.
லோக்பால் சட்டம்:




அரசு துறைகளில் ஊழலை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதமர் உட்பட உயர் பதவியில்உள்ளவர்களின் ஊழல் முறைகேடுகளையும் விசாரிக்க அதிகாரம் படைத்த, லோக்சபா சட்டம், 2013ல் கொண்டு வரப்பட்டது. 'ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் தலைவர், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டில்லியில் நடத்திய தொடர் போராட்டங்களுக்குப் பின், அப்போதைய, ஐ.மு., கூட்டணி அரசால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
நிலைக்குழுவின் பிற பரிந்துரைகள்:




லோக்பால் சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பிற திருத்தங்கள்:
* லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில், பிரதான எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலாக, லோக்சபாவில் அதிக, எம்.பி.,க்களைக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவரை இடம்பெற வைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
* ஊழல் குறித்த விசாரணைக்குப் பின், அவ்வழக்கை நடத்தும் அரசு வழக்கறிஞர், சி.பி.ஐ., இயக்குனர் ஆகியோரது நியமனம் மற்றும் தகுதியை நிர்ணயம் செய்வதிலும் திருத்தம் கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

எந்தெந்த கட்சிகளுக்கு கமிட்டி அழைப்பு:




பார்லி., குழுவின் பரிந்துரை மீது கருத்துகளை தெரிவிக்கும்படி, நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு, நிலைக்குழு சார்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.தமிழகத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க., தலைவர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு, கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. பார்லிமென்ட் நிலைக்குழு கூட்டத்தில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, ஆம் ஆத்மியின் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் போன்றோரிடமும் கருத்து கேட்கப்படும். அடுத்து நடைபெற உள்ள, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரின் போது, இந்த பரிந்துரைகள் சட்ட வடிவம் பெறும்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png