!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்'

கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு எதிரான வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த லோகேஸ்வரி உள்ளிட்ட ஐந்து மாணவ, மாணவியர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு:தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் 69 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுப் பிரிவு மாணவர்கள் என்பதால் அதிக மதிப்பெண்  எடுத்திருந்தும் மருத்துவ கல்லூரிகளில் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை. 'இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், என தெரிவித்திருந்தனர். 
இந்த மனுக்கள் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி பந்த் தலைமையிலான 'பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்களின் நகல்களை தமிழக அரசு வழக்கறிஞரிடம் வழங்கும்படி மனுதாரர்களின் வழக்கறிஞர் சிவ பாலமுருகனுக்கு உத்தர விட்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png