!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 19 ஆகஸ்ட், 2015

மதுக்கடையை மூடக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில், மாணவர்கள் ஈடுபடக்கூடாது' - பள்ளி கல்வித்துறை புது உத்தரவு.

      மதுக்கடையை மூடக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில், மாணவர்கள் ஈடுபடக்கூடாது' என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

         தமிழகத்தில் சில இடங்களில், மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டங்களில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்; இதனால், அவர்களது கல்வி பாதிக்கிறது. கல்வி பாதிக்காமல் தவிர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்குஉள்ளது.இதுபோன்ற போராட்டங்களில், பங்கேற்கக்கூடாது என, மாணவ - மாணவியருக்கு அறிவுரை வழங்க வேண்டும். பிரார்த்தனை கூட்டங்கள், நீதி போதனை வகுப்பு மற்றும் பாட வேளைகளில், வகுப்பு ஆசிரியர்கள், மாணவ மாணவியருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png