!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

கல்வி தரத்தை உயர்த்த மத்திய அரசு புது திட்டம்

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மூன்று புதிய குழுக்கள் அமைக்க, மத்திய மனிதவள அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.பல ஆய்வுகள்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து, மத்திய அரசு பல ஆய்வுகள் செய்துள்ளது. 
பள்ளிப் படிப்பில், மாணவர்களின் இடைநிற்றலை குறைப்பது மற்றும் புதிய பாடத்திட்டம் மற்றும் கல்விக் கொள்கையை உருவாக்குவது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக, மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமை வகித்தார். 
துணைவேந்தர்கள், மாநில கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 
மாநில அரசு நடத்தும் பள்ளிகளில் கல்வித்தரம் மற்றும் தேர்ச்சி சதவீதம் குறித்து விரிவாக 
விவாதிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மோசமாக உள்ளது, கற்பிக்கும் முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என, யோசனைகள் கூறப்பட்டன.
இதைத் தொடர்ந்து, மூன்று புதிய ஆய்வுகுழுக்கள் அமைக்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மத்திய மனிதவள அமைச்சக அதிகாரி, மத்திய கல்வி ஆலோசனை வாரிய அதிகாரி, மாநில கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் இந்தக் குழுக்களில் இடம்பெறுவர்.
முதல் குழு, வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்து திட்டம் தயாரிக்கும். 
திட்டம் வகுக்கும்இரண்டாவது குழு, மாநில அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த திட்டம் வகுக்கும். மூன்றாவது குழு, பள்ளி மற்றும் கல்லுாரிகளில் தொழில்நுட்ப மற்றும் தனித்திறன்களை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்யும்.இந்தக் குழுக்களிடம், ஓராண்டுக்குள் தங்கள் கருத்துகள் மற்றும் யோசனைகளை மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png