!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

பள்ளிக்கல்வியில் ஆங்கில வழியை திணிக்கக்கூடாது ‘‘தமிழ் வழிக்கல்வி தாய்ப்பால், ஆங்கில வழிக்கல்வி புட்டிப்பால்’’ சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன் பேச்சு

பள்ளிக்கல்வியில் ஆங்கில வழியை திணிக்கக்கூடாது என்றும், தமிழ் வழிக்கல்வி தாய்ப்பால் போன்றது என்றும் ஆங்கில வழிக்கல்வி புட்டிப்பால் போன்றது என்றும் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன் பேசினார். 


ஆர்ப்பாட்டம்

பள்ளிக்கல்வியில் தமிழ் வழியை மட்டுமே பின்பற்றவேண்டும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 80 சதவீதம் வரை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் தமிழ் வழிக்கல்வி கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தின் போது அவர் பேசியதாவது:-

80 சதவீத இட ஒதுக்கீடு

தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் ஆங்கில வழி திணிக்கப்பட்டு, தமிழ் வழிக்கல்வி அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ் வழிக்கல்வி என்பது தாய்ப்பால் போன்றது. ஆங்கில வழிக்கல்வி என்பது புட்டிப்பால் போன்றது. என்றைக்கும் தாய்ப்பால் குடித்து வளர்கின்ற பிள்ளைகளே ஆரோக்கியமாக இருக்கும். 

எனவே அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட அனைத்து ஆங்கில வழிப்பிரிவுகளையும் நீக்கவேண்டும். மொழிப்பாடமாகவும், பயிற்றுமொழியாகவும் தமிழை பெறாத பள்ளிகள் தொடங்க அனுமதி தரக்கூடாது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி சேர்க்கையில் 80 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும். வணிக நோக்கில் முதல் ஆண்டு பாடம் நடத்தாமல், இரண்டாம் ஆண்டுக்கான பாடங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி கோட்டை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png