!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

கல்லூரி அருகே 'லாகிரி'உயர்கல்வி துறை தடை!
கல்லுாரி அருகே குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 2,000 கல்லுாரிகள் உள்ளன. கல்லுாரி வளாகத்தில் இருக்கும், கேன்டீனில், உணவுப் பொருள் மட்டுமே விற்கப்படும். ஆனால், சில கல்லுாரி கேன்டீன்களில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக, உயர்கல்வித் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.


இதையடுத்து, இன்ஜினியரிங் கல்லுாரிகள், கலைக் கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள், ஐ.டி.ஐ., ஆகிய கல்வி மையங்களின் வளாகத்திலோ, அருகிலோ புகையிலை பொருட்கள் விற்கவும், பயன்படுத்தவும் தடை விதித்து உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்கவும், 'ஸ்டாக்' வைக்கவும், தயாரிக்கவும் ஏற்கனவே தடை இருக்கிறது.

கல்லுாரி கேன்டீன் மற்றும் கல்லுாரிக்கு அருகிலுள்ள பகுதிகளில், இவற்றை விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது. மீறினால், உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் அளித்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.- 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png