கலாம் சமாதி அருகே கடைகளுக்கு தடை!
'ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் சமாதி அருகே, கடை விரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
'ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் சமாதி அருகே, கடை விரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் உடல், ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு, தினமும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமாதி அருகே சிலர் கடைகள் விரித்து, டிபன், டீ, காபி, ஜூஸ், குடிநீர் பாட்டில் விற்பனை செய்கின்றனர்.
இதனால், சமாதியை சுற்றி குப்பை குவிகிறது. இவற்றை,துப்புரவு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.இதனால், அப்துல் கலாம் சமாதி அருகே கடைகள் விரிக்க, போலீசார் தடை விதித்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.