ஆசிரியரை பயமுறுத்தவிஷம் குடித்த மாணவர்கள்
கொடைக்கானலில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பூச்சி மருந்தை உட்கொண்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாயுடுபுரம் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகின்றது. நேற்று இப்பள்ளியின் மாணவர்கள் 4 பேர் கழிப்பறையில் வைத்து பூச்சி மருந்தினை வாங்கி குடித்துள்ளனர். கழிப்பறைக்கு வந்த ஆசிரியர் ஒருவர் அம்மாணவர்களை பார்த்துவிட்டார். பள்ளி நிர்வாகத்தில் தகவல் தெரிவித்தார்.இதையடுத்து மாணவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாணவர்கள் நால்வரும் கணக்கு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றதை ஆசிரியர் கண்டித்ததால், அவரை பயமுறுத்த இத்தவறான முடிவில் இறங்கியதாக தெரிகிறது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.