!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

இலவச சைக்கிள் 'வேஸ்ட்' தயாராகிறது மாற்று திட்டம்

நீலகிரியில், அரசின் விலையில்லா சைக்கிள் திட்டம், முழு பலனை அளிக்காத நிலையில், மாற்றுத் திட்டம் ஏதேனும் நிறைவேற்றும்படி, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல, மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.தமிழகம் முழுக்க, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. நீலகிரியில் இத்திட்டத்தின் கீழ், 113 அரசு, உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகின்றன.கொண்டை ஊசி வளைவுகள், மேடு, பள்ளம் நிறைந்த நீலகிரி சாலைகளில், சைக்கிளால் பயனில்லை; வீடுகளில், வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பலர், 500, 1,000 ரூபாய்க்கு விற்று விடுகின்றனர்.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'மாணவ, மாணவியர் சைக்கிள்களில் பள்ளிகளுக்கு சென்று வந்தால், இலவச பஸ் பாஸ்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும்; மாறாக, ஆண்டுக்காண்டு இலவச பஸ் பாஸ்கள் வழங்குவது, அதிகரித்து வருகிறது' என்றனர்.

விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்தில், நீலகிரிக்கு, மின்விசிறிக்கு மாற்றாக, மின்சார அடுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல், விலையில்லா சைக்கிளுக்கு மாற்றாக, வெம்மையாடை, மழை கோர்ட், காலணி உட்பட வேறு பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.மாவட்ட கலெக்டர் சங்கரிடம் கேட்டதற்கு, “நீலகிரி, கூடலுாரில், கணிசமான அளவு மாணவ, மாணவியர் சைக்கிள் ஓட்டுகின்றனர். சைக்கிளுக்கு மாற்றாக, வேறு பொருளை அரசுக்கு, பரிந்துரை செய்ய வேண்டும். ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா தாலுகாவில் மட்டும் சைக்கிளுக்கு மாற்றாக, டேபிள், இருக்கை உட்பட வேறு மாற்றுப் பொருளை தேர்வு செய்து வருகிறோம். கலெக்டர்கள் மாநாட்டில், இது தொடர்பான ஆலோசனையை, முதல்வரிடம் முன்வைக்க திட்டமிட்டு உள்ளோம்,” என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png