!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

நாட்டின் எதிர்காலமாக திகழ்வார் அப்துல் கலாம்

''மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இந்தியாவின் வரலாறு மட்டுமல்ல; அவரது திட்டங்களால், அவர் இந்தியாவின் எதிர்காலமாக திகழ்வார்,'' என, கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் புகழாரம் சூட்டினார்.

'கனவல்ல... எழுச்சி' என்ற பெயரில், அப்துல் கலாமின் சாதனைகளை நினைவு கூரும் நிகழ்ச்சி, தினமணி நாளிதழ், சென்னை பல்கலை, ரஹ்மத் அறக்கட்டளை மற்றும் 'புளூ ஓஷன் பிலிம் அண்ட் டெலிவிஷன் அகாடமி' சார்பில், சென்னைப் பல்கலையின் நுாற்றாண்டு அரங்கில், நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசியதாவது:ஜனாதிபதி கலாம் இருந்தபோது, பெயரளவில் அனுபவிக்கும் பதவியாக இருந்த இடத்தை, ஆக்கப்பூர்வமாக மாற்றி காட்டினார். பார்லிமென்டில், பட்ஜெட் உரையில் எழுதி கொடுத்ததை படிக்க வேண்டுமென்ற நடைமுறையை மாற்றி, தன் எண்ணங்களை சேர்த்தார்.ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில், 15 நிமிட நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், உலகத்தலைவர்கள் கரகோஷம் எழுப்ப, ஒரு மணி நேரம் வரை தொடர்ந்து பேசினார்.தென் ஆப்பிரிக்காவிலுள்ள, 53 நாடுகளுக்கு, தொலைதுாரக் கல்வி, மருத்துவ வசதிகளை கொண்ட திட்டங்களுக்கு, 500 மில்லியன் டாலர் ஒதுக்க, ஒரே இரவில் இந்திய அரசை ஒப்புக் கொள்ள வைத்தார்.இந்தியாவிலுள்ள கிராமங்களையும், நகரங்களையும் தொழில்நுட்பங்களையும் இணைக்க, புரா என்ற திட்டம் கொண்டு வந்தார். கல்வியில் தொழிற்கல்வியை புகுத்த மத்திய அரசை வலியுறுத்தி, தற்போது அந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இப்படி, 'இந்தியா - 2020' திட்டத்தை செயல்வடிவத்துக்கு கொண்டு வந்தார். அவர் வரலாறு அல்ல; இந்தியாவின் எதிர்காலம்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்: 
கலாமின் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பது பெருமையாக உள்ளது. தன்னைப் பற்றி ஒரு மனிதன் கூட குறைகூற முடியாமல் வாழ முடியும் என்று வாழ்ந்தவர் அவர். இந்தியாவில் அனைத்து தரப்பு இளைஞர்களின் வளர்ச்சிக்கும், அவர் ஒரு டானிக். பொது வாழ்க்கையில் பதவி இருந்தால் தான் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்ற மாயையை உடைத்த மாமனிதர்.

கவிக்கோ அப்துல்:
ரகுமான்: திருக்குறளுக்கு இலக்கணமாக, அதிலுள்ள வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் கலாம். அவர் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல; நல்ல கவிஞரும்கூட. ஏழை, எளியோர், ஆதரவற்றோருக்கு யார் உதவுகிறாரோ, அவர் தான் உண்மையான இறை வழிபாடு உடையவர் என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன், கலாமின் குடும்ப உறுப்பினர் ஷேக் சலீம், டாக்டர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலாம் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு 
கண்காட்சியை, ரஹ்மத் அறக்கட்டளை தலைவர் முஸ்தபா திறந்து வைத்தார்.கலாமின் படத்துக்கு ரோஜாப்பூ மலர்கள் துாவி, அனைவரும் அஞ்சலி செலுத்தினர். கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படம் 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png