!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

சென்னையை 'மிரட்டிய' ஆயுத குவியல்! : மாணவர்கள் உற்சாகம்
சென்னை, பல்லாவரத்தில் நேற்று நடந்த ஆயுத கண்காட்சியை கண்டு ரசித்த மாணவர்கள், 'ராணுவத்தில் சேர்ந்து, நாட்டுக்கு சேவை செய்ய ஆர்வமாக உள்ளது' என, உற்சாகமாக கூறினர்.ராணுவத்தில் சேரும் ஆர்வத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்த, 'ராணுவத்தை அறிந்து கொள்ளுங்கள்' என்ற தலைப்பில், பல்லாவரம், சி.எஸ்.ஐ., செயின்ட் ஸ்டீபன்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், ராணுவ ஆயுத கண்காட்சி, நேற்று நடந்தது.

அதில், இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கைத் துப்பாக்கி, ஏ.கே., 47 ரக துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை, உள்ளிட்ட 14 வகையான ஆயுதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.அவற்றை, சி.எஸ்.ஐ., பள்ளிகளின் மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். அவர்களுக்கு ஆயுதங்களின் பெயர், பயன்படுத்தும் விதம், எந்த நாட்டில் வாங்கப்பட்டவை ஆகியவற்றை ராணுவ வீரர்கள் விளக்கி கூறினர். 
அதை தவிர்த்து, பல கேள்விகளை மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டு தெளிவு பெற்றனர்.
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்* கண்காணிப்பு ரேடார்: ஜி.பி.எஸ்., உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட இக்கருவி, இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. அதன் மூலம், சிறிய வாகனங்களின் 
நடமாட்டத்தை, 8 கி.மீ., தூரம்; ஹெலிகாப்டர் நடமாட்டம், 15 கி.மீ., தூரம்; கனரக வாகனங்கள் நடமாட்டத்தை 18 கி.மீ., தூரம் வரை கண்டறியலாம்.
* 81 எம்.எம்., ரக சிறிய பீரங்கி: 
இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. ஐந்து கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்க கூடியது. ஒரு நிமிடத்துக்குள், தேவைக்கேற்ப, 6 முதல், 20 குண்டுகளை இதன் மூலம் செலுத்தலாம்.
* ஏவுகணை: ரஷ்யாவில் வாங்கப்பட்டது. இதன் மூலம், குறைந்தது, 25 மீட்டர் தூரம் வரை தாக்கலாம். எடை, 28 கிலோ.
* எறிகுண்டு வீசும் துப்பாக்கி: ரஷ்ய தயாரிப்பு; எடை, 30 கிலோ. 1,700 மீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது.* 84 எம்.எம்., ரக ராக்கெட் லாஞ்சர்; சுவீடன் நாட்டிடம் வாங்கப்பட்டது. ஆயிரம் மீட்டர் தொலைவில் உள்ள, எதிரிகளை அழிக்கும் வல்லமை கொண்டது.
* 51 எம்.எம்., சிறிய ரக பீரங்கி: உள்ளூரில் தயாரிக்கப்பட்டது. சிறிய மோதல்களில் அதிக அளவு பயன்படுத்தக் கூடியது. எடை, 4.88 கிலோ; 180 மீட்டர் முதல் 1,080 மீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது.* 7.62 எம்.எம்., 'ஸ்னைபர்' துப்பாக்கி: 1,300 மீட்டர் தூரத்தில் உள்ள ஒருவரை குறிவைத்து, வீழ்த்தும் திறன் கொண்டது. குறிப்பாக, எதிரி படைகளை வழி
நடத்தும் கமாண்டோக்களை, குறிவைத்து தாக்கி, அந்த படைகளை நிலைகுலைய செய்ய வழி வகுக்கும். 
ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டது. எடை, 4.3 கிலோ.* கிரனெட் லாஞ்சர்: சிறிய லாஞ்சர் என்றழைக்கப்படுபவை. ஒவ்வொரு குண்டாக மட்டுமே செலுத்த முடியும். தென் ஆப்பிரிக்காவில் இருந்து வாங்கப்பட்டது. 200 மீட்டர் தூரத்தில் உள்ள எதிரிகளை வீழ்த்தலாம்.* ஏ.கே., 47 துப்பாக்கி: ரஷ்ய தயாரிப்பு. 400 மீட்டர் தூரத்தில் உள்ள எதிரிகளை சுட்டு வீழ்த்தலாம். எடை, 4.64 கிலோ.* 40 எம்.எம்., கிரனெட் லாஞ்சர்: இதை தனியாக பயன்படுத்த முடியாது. மற்ற துப்பாக்கிகளில் இணைத்து, நேரிடையாக, 5 மீட்டர் முதல், 400 மீட்டர் வரையிலும், மறைமுகமாக, 200 மீட்டர் முதல், 350 மீட்டர் வரையிலும் உள்ள எதிரிகளை அழிக்கலாம். இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.
'சேவை செய்ய வேண்டும்!'''கண்காட்சி சிறப்பாக இருந்தது. இங்குள்ள ஆயுதங்களை பார்க்கும்போது, ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தில் சேர்ந்து, நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்.
ஆகாஷ், செயின்ட் ஸ்டீபன்ஸ் பள்ளி மாணவர்.'வியப்பாக இருந்தது!'''கண்காட்சி சிறப்பாக இருந்தது. ராக்கெட் லாஞ்சரை பார்த்த போது, வியப்பாக இருந்தது. படித்து பெரிய ஆளாகி, ராணுவத்தில் சேர்ந்து, பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும், இதேபோல் மற்ற மாணவர்களுக்கு, ஆயுதங்கள் குறித்து விளக்கி கூற வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டுள்ளது.பரத்குமார், மறைமலை அடிகளார் பள்ளி, பல்லாவரம்.'கமாண்டோ' ஆக வேண்டும்!''கண்காட்சி பிடித்திருந்தது. ஆயுதங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாக விளக்கினர். நானும் நன்றாக படித்து, இதேபோல் ஆயுதங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. ராணுவத்தில் சேர்ந்து,'கமாண்டோ'வாகி, சேவை செய்ய வேண்டும்.
ஜெயபிரகாஷ், செயின்ட் ஸ்டீபன்ஸ் பள்ளி மாணவர்.'தினமலர்' சொன்னது!''இங்கு ராணுவ ஆயுத கண்காட்சி நடக்கிறது என்பதை, 'தினமலர்' நாளிதழில் படித்து, எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்காக, ஆர்வத்துடன் வந்தேன். என்னுடன், மகள் ஸ்ரீ ஹரிபிரியாவையும் அழைத்து வந்தேன். மகளின் எதிர்காலத்திற்கு கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும்.விஜயகுமார், பல்லாவரம்.'குழந்தைகளுடன் வந்தோம்!'''குழந்தைகளுக்கு, இன்று பள்ளி விடுமுறை என்பதால், அவர்களை அழைத்து கொண்டு, போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்க வந்தோம். அவற்றை, எங்கள் குழந்தைகள், ஆர்வத்துடன் கேட்டு தெரிந்தும் கொண்டனர். ராணுவத்தில் சேர வேண்டும் என்பது, என் மகன் அஷ்வந்தின் விருப்பம்

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png