!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பணியை தொடர தடை தலைமை செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் பணியை தொடர்வதற்கு வி.ரத்தினசபாபதிக்கு தடை விதித்து தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊழல் வழக்குப்பதிவு
தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகனின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
பல்வேறு ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் வி.ரத்தினசபாபதி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் கடந்த 13.10.11 அன்று குற்ற வழக்குப்பதிவு செய்தனர். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வி.ரத்தினசபாபதி மனு தாக்கல் செய்துள்ளார்.
பணியை தொடரத்தடை
போலீசார் பதிவு செய்த ஊழல் வழக்கு விசாரணைக்கும், ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்கும் குந்தகம் ஏற்படாத வகையில், வி.ரத்தினசபாபதியின் வயது 62 பூர்த்தியாகியுள்ள நிலையில், 2–ந் தேதி பிற்பகலில் இருந்து அவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் பணியை தொடர்வதற்கு தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png