!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

150 டன் விடைத்தாள் முறைகேடு: தேர்வு அலுவலர் 'சஸ்பெண்ட்'
 பாரதியார் பல்கலையில், 150 டன் விடைத்தாள் முறைகேடு புகார் காரணமாக, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கோவை பாரதியார் பல்கலையில், நான்கு மாதங்களுக்கு முன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக, கிளாடிஸ் லீமா ரோஸ் நியமிக்கப்பட்டார். கடந்த மாதம், பல்கலைக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர், அதிகாரிகள், அலுவலர்கள் இல்லாமல், தன்னிச்சையாக, 150 டன் விடைத்தாள்களை எடுத்துச் சென்றதாகவும், இதனால், பல்கலைக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. புகார் மற்றும் பல கோரிக்கைளை வலியுறுத்தி, பல்கலை ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்கள் சங்கம் சார்பில், தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை உத்தரவின்படி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், கிளாடிஸ் லீமா ரோஸ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ரோஸ், விடுமுறையில் உள்ளதால், 'சஸ்பெண்ட்' உத்தரவு, தபால் மூலம் அனுப்பப்பட்டது. 

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png