!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

ரேஷன் கார்டுகளில் வருகிறது உள்தாள் மீண்டும் 'ஸ்மார்ட் கார்டு' இப்போதைக்கு இல்லை

'ஸ்மார்ட் கார்டு'க்கு பதில், பழைய ரேஷன் கார்டுகளில் மீண்டும் உள்தாள் பயன்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 
தமிழகத்தில், அரிசி வாங்கு வோர், சர்க்கரை வாங்குவோர், காவலர், எந்த பொருளும் வாங்காதோர் என, மொத்தம், 2.07 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் உள்ளன. உணவு வழங்கல் துறை சார்பில், 2005ல் வழங்கப்பட்ட ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம், 2009ல் நிறைவடைந்தது. அரசின் சலுகை
பின், ரேஷன் கார்டில், ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டப்பட்டு, அவற்றின் செல்லத்தக்க காலம், வரும் டிசம்பர் மாதம் வரை, நீட்டிக்கப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில், ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கு, தமிழகத்தில் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ஆனால், அரசின் சலுகைகளை பெற சிலர், பல முகவரியில், அதிக ரேஷன் கார்டுகளை வைத்துள்ளனர். 
இதனால், கூடுதல் செலவை தவிர்க்க, விழி, விரல் ரேகை பதிவுடன், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. 
மத்திய அரசு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட விவரங்களை கொண்டு விழி, விரல் ரேகை மற்றும் புகைப்படத்துடன், 'ஆதார்' அடையாள அட்டை வழங்கி வருகிறது. இந்த விவரங்களை, மத்திய அரசிடம் பெற்று, அதை, 'ஸ்மார்ட் கார்டு'க்கு பயன்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது. இதுதவிர, ரேஷன் கடை மூலமும், மக்களிடம் இருந்து, கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. 
தனியார்
இதையடுத்து, 350 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் கார்டு' ஒருங்கிணைப்பு பணிகளை, தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ள, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'டெண்டர்' கோரப்பட்டது. 
இதில் தேர்வான, 'ஆம்னி அகேட் சிஸ்டம்ஸ்' என்ற நிறுவனத்திடம், 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் பணி, ஜனவரி மாதம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, அந்நிறுவனம், 'ஸ்மார்ட் கார்டு' மென்பொருளை தயாரித்து வருகிறது. தமிழகத்தில், அடுத்த ஆண்டு, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கினால், மக்களிடம், எதிர்ப்பு எழுவதற்கு வாய்ப்புள்ளதாக அரசு கருகிறது. இதனால், 2016ல், 'ஸ்மார்ட் கார்டு'க்கு பதில் வழக்கம் போல், ரேஷன் கார்டில் உள்தாள் பயன்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, சென்னை, தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரியலுார், புதுக்கோட்டை மாவட்டங்களில், 90 சதவீதத்திற் கும் மேல், 'ஆதார்' அட்டை வழங்கப்பட்டு உள்ளன. இதனால், முதற்கட்டமாக, அம்மாவட்டங்களில், தற்போது, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கவும், பின், மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தலுக்கு பின், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, அரசு அறிவுறுத்தி உள்ளது. 
எனவே, ரேஷன் கார்டில், கடந்த ஆண்டு ஒட்டப்பட்ட உள்தாளில், ஒரு பக்கம் காலியாக உள்ளது. அது, 2016ல் பயன்படுத்தி கொள்ளப்படும். இதற்கான, அரசாணை விரைவில் வெளியிட்டு, அந்த விவரம், உணவுத் துறை மூலம், பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். தற்போது, 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தின் ஒரு பகுதியாக, ரேஷன் கடைகளில், 'பில்' போட, 'டேப்லெட்' கருவி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

புதுக்கோட்டை மாவட்டங்களில், 90 சதவீதத்திற்கும் மேல், 'ஆதார்' அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதனால், முதற்கட்டமாக, அந்த மாவட்டங்களில், தற்போது, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கவும், பின், மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தலுக்கு பின், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, அரசு அறிவுறுத்தி உள்ளது

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png