!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 23 நவம்பர், 2015

நீடிக்கிறது காற்றழுத்த தாழ்வு 2 நாட்களுக்கு மழை உண்டு

'வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, குமரி கடல் பகுதியில் நீடிப்பதால், தமிழகத்தில், இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


சென்னை உட்பட, தமிழகத்தின் வட மாவட்டங்களில், இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. சற்று மழை ஓய்ந்து மீட்பு பணிகள் தொடரும் நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், 'இன்னும், இரு நாட்களுக்கு, தமிழகத்தில் கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கையை ஒட்டி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, குமரி கடல் பகுதியில், அதே காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடித்து வருகிறது.
இதனால், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது.

நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூரில், 9 மற்றும் புதுச்சேரியில், 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த, இரு நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன, மிக கன மழையும், உள் மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்.

சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; விட்டு விட்டு மழை பெய்யும்; சில இடங்களில் கன மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png