!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 24 நவம்பர், 2015

மாநகராட்சி பள்ளிகளில் 'டேப்லெட்' கல்வி கற்றல், கற்பித்தலை மேம்படுத்த முயற்சி

        கோவை மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்த, 'டேப்லெட்' கல்வி முறை, அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் சுயமாக கற்கும் திறன், புரிதல் கல்வி மேம்படும்.
 
        கோவை மாநகராட்சியிலுள்ள, காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில், மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த, 'அமெரிக்கன் இந்தியன் பவுண்டேஷன்' சார்பில், 'டேப்லெட்' கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இந்த முறைக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், அனைத்து மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளிலும், 'டேப்லெட்' கல்வி முறையை புகுத்த திட்டமிடப்பட்டது.

திட்டத்துக்காக, மாநகராட்சி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், திட்டத்தை செயல்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவு செய்யப்பட்டுள்ளது.பள்ளியில், 6 - 10ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களையும் நவீன தொழில்நுட்ப முறையில் கற்பிக்கவும், ஆசிரியர்கள் இல்லாமல் கற்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 7.75 லட்சம் ரூபாயில், 31 'டேப்லெட்' வாங்கப்பட்டு, பள்ளி ஆய்வுக்கூடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

உயர்நிலை வகுப்புகளின் அனைத்து பாடங்களின், இ - பாடத்திட்டம் சாப்ட்வேர், அனைத்து டேப்லெட்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஒரு ஆசிரியர் ஒரு மாதத்தில், ஒன்று அல்லது இரண்டு பாடங்களை, டேப்லெட் கல்வி முறையில் போதிக்க வேண்டும்.

முதல் படி
ஆறு முதல், 10ம் வகுப்பு மாணவர்கள், வாரம் ஒரு முறை ஒரு பாடத்துக்கு, 'டேப்லெட்' ஆய்வுக்கூடத்துக்கு அழைத்து செல்லப்படுவர். 'பிளிப்டு கிளாஸ்' முறையில், மாணவர்களின் கற்கும் ஆர்வத்தை துாண்டும் வகையில், பாடம் பற்றிய முன்னோட்டம் அன்றாட வாழ்வுடன் இணைந்த செயல்முறைகளுடன், பல்வேறு காட்சிகளாக விளக்கப்படுகிறது.
'பவர் பாயின்ட்' முறையில், 'டிஜிட்டல் ஈக்குலைசர் வே ஆப் டீச்சிங்' முறையில், பாடத்தை படித்து புரிந்து கொள்ளலாம். ஒரு மார்க் வினா, குறு மற்றும் நெடுவினா கேள்விகளுக்கு, பதில் தயாரிக்கும் முறைகளை சுயமாக கற்றுக்கொள்கின்றனர்.

இரண்டாம் படி
'டேப் - லெட்' கல்வி முறைக்கு பின், வகுப்பில் மாணவர்களுக்குள் கலந்துரையாடல் நடக்கும். அப்போது, பாடம் பற்றிய மாணவர்களின் சந்தேகத்துக்கு மாணவர்களே விளக்கமளிக்க வேண்டும். மாணவர்களால் விளக்கமளிக்க முடியாத கேள்விக்கு ஆசிரியர்கள் பதில் கூறுவர்.
அதன்பின், ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். மாணவர்களால் பதில் அளிக்க முடியாத பகுதியை ஆசிரியர் விளக்குவார். இதனால், பாடத்தின் அனைத்து பகுதியையும் மாணவர்கள் புரிந்து படிக்க முடியும்.

மூன்றாம் படி
மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டு, அவர்களின் அறிவு, புரிதல், செயல்படுத்துதல், ஒப்பீடு செய்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இதனால், மாணவர்களின் சுய கற்றலும், பாடத்திட்டத்தை முழுமையாக புரிந்து படிக்கும் திறனும் மேம்படும். ஆசிரியர் விடுப்பில் இருந்தாலும், அந்த ஆசிரியர் கற்பிக்க வேண்டிய பாடத்தை, 'டேப்லெட்' கல்வி முறையில் கற்றுக்கொள்ளலாம். கற்பதை நினைவில் நிறுத்தவும், தேர்வின் போது வெளிப்படுத்தவும், இது உதவும்.

மாநிலத்தில் முதல் முறையாக, 'டேப் லெட்' கல்வி முறை, கோவை மாநகராட்சியில் புகுத்தப்படுகிறது. வரும், 25ம் தேதி, வரதராஜபுரம் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில், இக்கல்வி முறை துவக்க விழா நடக்கிறது.மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், ''முதல் கட்டமாக, வரதராஜபுரம் உயர்நிலைப்பள்ளியில், டேப்லெட் கல்வி முறை துவங்கப்படுகிறது. தொடர்ந்து, அனைத்து மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளிலும் திட்டம் விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png