!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 26 நவம்பர், 2015

ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மழை நீர் வெளியேற இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும்படி, அதிகாரிகளுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. 



வாடகை இயந்திரங்கள்:


தமிழகத்தில், மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, உள்ளாட்சி துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:மழைக்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நவீன இயந்திரங்கள் மூலம், கால்வாய் அடைப்புகள் அகற்றப்பட்டன. சென்னையில் அடைப்புகளை நீக்க, டில்லியில் இருந்து, வாடகைக்கு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால், எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்ததால், தண்ணீர் தேங்குவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனினும், தண்ணீரை வெளியேற்ற, பல நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில், தண்ணீரை வெளியேற்ற, பாதாள சாக்கடை மூடிகளை மக்கள் திறந்து விட்டு விட்டனர். இதனால், கழிவு நீர் கால்வாய்களிலும், அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. எனவே, உடனடியாக தண்ணீரை வெளியேற்ற, அந்தந்தப் பகுதியின் சூழ்நிலைக்கு ஏற்ப, நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேற இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை, உடனடியாக அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை:


'மூன்று நாட்களுக்கு மழை உண்டு' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்தாலும், எவ்வளவு மழை வரும்; எவ்வளவு தண்ணீர் தேங்கும் என்பதை கணக்கிட முடியாததால், எவ்வளவு தண்ணீர் தேங்கினாலும், அதை வெளியேற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விவரம் சேகரிப்பு:


கன மழையால் ஏற்பட்ட பாதிப்பு, மீண்டும் ஏற்படாமல் இருக்க, பல விவரங்களை சேகரிக்கும்படி, உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
* தண்ணீர் தேங்கிய இடம்
* எதனால் தண்ணீர் தேங்கியது?
* தேங்கிய தண்ணீரை வெளியேற்ற வழி என்ன என்பது உட்பட பல விவரங்களை சேகரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபரீதம் ஏற்படாமல் இருக்க, சென்னை மற்றும் புறநகரில், தற்போதுள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். மழை நீர் வடிகால் கால்வாய்களின் அகலத்தை அதிகரிக்க வேண்டும் என, அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png