!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 30 நவம்பர், 2015

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
'பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில் தவறுகள் இருந்தால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. மாவட்டம் தோறும், தேர்வு மையங்களின் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை விவரங்கள், பள்ளிகளிலிருந்து சேகரிக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தவறுகள் வருவதால், தேர்வு நடத்தும் போது, பல மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் இல்லை; பட்டியலில் பெயர் இல்லை என்பன போன்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன.


இந்த ஆண்டு இதுபோன்ற குழப்பங்களைத் தடுக்க, ஆசிரியர்களுக்கு விடப்பட்டுள்ள
உத்தரவுகள்:
* தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும்
* பட்டியலில் தவறுகள் இருக்கக்கூடாது. பெயர், விவரம், முகவரியில் பிழைகள் இல்லாமல் கணினியில் பதிவு செய்ய வேண்டும்.'பட்டியலில் தவறு இருந்தால், ஆசிரியர், ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png