!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 24 நவம்பர், 2015

பள்ளி வளாகங்களில் தேங்கிய நீரை அகற்ற உத்தரவு

          பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை, 'பம்ப்செட்' மூலம் வெளியேற்றவும், கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், பொதுப்பணித் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் மழை குறைந்து மீட்பு பணி நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரிகளில் சீரமைப்பு பணி துவங்கி உள்ளது. பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தேங்கியுள்ள நீரை, பொதுப்பணித்துறை மூலம் அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
 
           பொதுப்பணித்துறையின் பணிகளை பார்க்கும் ஒப்பந்ததாரர்கள் மூலம், 'பம்ப்செட்' மூலம் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வெள்ளப் பெருக்கினால், பள்ளி கட்டடங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளின் 
நிலவரம் குறித்து, தினமும் மாலை 5:00 மணிக்கு, அறிக்கை தர, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
பள்ளி இருக்கும் இடம்; மாணவ, மாணவியர் எங்கிருந்து வருகின்றனர்; பள்ளி பகுதியிலும், மாணவர் வரும் வழியிலும் மழை நிலவரம், வெள்ள நிலைமை குறித்த தகவல்களை, அறிக்கையில் இடம் பெறச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சுத்தம் செய்யப்பட்ட பள்ளி வளாகங்களில், சுகாதாரத் துறை மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கவும், பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கவும் அதிகாரிகள் 
உத்தரவிட்டுள்ளனர்.


மாற்று கட்டடங்களில் பள்ளிகள்
அபாயகர பள்ளி கட்டடங்கள், பாதுகாப்பில்லாத வகுப்பறை கட்டடங்களுக்கு பதில், அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் சமூகநல கூடங்களில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png