!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 27 நவம்பர், 2015

சென்னையில் -வெள்ளம், 'ஆர்டர்' குறைந்தது ஐ.டி., ஊழியர்கள் கொத்து கொத்தாக இடமாற்றம்?

சென்னையில் உள்ள, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு, கொத்து கொத்தாக இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை நகரில் அம்பத்துார், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், ஓ.எம்.ஆர்., எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் பெரும்பாக்கம் போன்ற இடங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட, ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. அவற்றில், 'டி.சி.எஸ்., காக்னிசன்ட்' நிறுவனங்களில், தலா, 60 ஆயிரம் ஊழியர்கள்; 'விப்ரோ, எச்.சி.எல்., சத்யம், ஐ.பி.எம்.,' போன்ற நிறுவனங்களில், மூன்று லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.


திடீரென அவர்களில் பலர், கொத்து கொத்தாக வெளியூர்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது. சென்னையில் உள்ள சில, ஐ.டி., நிறுவனங்களுக்கு, 'புராஜக்ட்' எனப்படும் பணி ஆணைகள் குறைந்ததே அதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.இது குறித்து, ஐ.டி., நிறுவன ஊழியர் அமைப்பைச் சேர்ந்த செந்தில் என்பவர் கூறியதாவது:

சென்னை நகரில் ஏற்பட்ட வெள்ளத்தால், ஐ.டி., நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்பட்டது உண்மை தான். குறிப்பாக, ஓ.எம்.ஆர்., சாலை, பெரும்பாக்கம் மற்றும் அம்பத்துார் எஸ்டேட் பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் தண்ணீர் புகுந்ததால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது; பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வர முடியவில்லை.

ஆனால், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட புராஜக்ட்களை குறித்த காலத்தில் முடித்து தர வேண்டும் என்பதால், 'பேக் அப் லொகேஷன்' எனப்படும் சில ஊழியர்களை வேறு ஊர்களுக்கு அனுப்பும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒவ்வொரு புராஜக்ட்டையும் நெருக்கடியான நேரங்களில் வேறு ஊர்களில் இருந்து தொடரும் வகையில் முன்னேற்பாடு செய்யப்படும்.
அதன்படி சிலர், பெங்களூரு, ஐதராபாத் போன்ற ஊர்களுக்கு, குறுகிய காலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எனக்கு தெரிந்து, பெருமளவிலான ஊழியர்கள் சென்னையில் இருந்து இவ்வாறு அனுப்பப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.பெரும்பாக்கம் அரசு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணி புரியும் வசுந்தரா என்பவர் கூறும் போது, ''எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் சில ஊழியர்கள், புராஜக்ட்டை நிறைவேற்றும் பணிக்காக வெளியூர் அனுப்பப்பட்டுள்ளனர். எனினும் இது தற்காலிகமானது தான்,'' என்றார்.

டி.சி.எஸ்., சொல்வது என்ன?:சென்னையில் இருந்து ஊழியர்களை வெளியூருக்கு அனுப்பவில்லை' என, டி.சி.எஸ்., நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.அந்த நிர்வாகத்தினர்
கூறியதாவது:வெள்ளத்தின் போது பணிகள் பாதிக்கப்பட்டாலும், சிலரை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய கேட்டுக் கொண்டோம்.

மேலும் சென்னையில் இருக்கும் புராஜக்ட் பாதிக்கப்பட்டால், வெளியூரில் இருந்த படி வேறு ஊழியர்களால் அதை தொடரும் வசதியும் உள்ளது. அதனால், யாரையும் இங்கிருந்து தற்காலிகமாக கூட அனுப்ப அவசியம் ஏற்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'நாஸ்காம்' விளக்கம்:'நாஸ்காம்' எனப்படும் தேசிய சாப்ட்வேர் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அமைப்பின் தமிழகம் மற்றும் கேரள பிராந்திய இயக்குனர் ஆர்.புருஷோத்தமன் கூறுகையில், ''ஓரிடத்தில் நடக்கும் பணிகள் தடைபட்டால், அதை வேறிடத்தில் இருந்த படி தொடரக்கூடிய, 'பிஸினஸ் கனெக்டிவிட்டி' காரணமாக, தற்காலிகமாக சில ஊழியர்கள் வெளியூர்களுக்கு சென்றிருக்கலாம். 'ஆர்டர்' குறைந்ததால் அதிக அளவிலான ஊழியர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறு,'' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png