!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 28 நவம்பர், 2015

வீட்டுக்கு அருகில் 'டாஸ்மாக்:' மாணவியரின் அவலம்

வீட்டிற்கு அருகில், 'டாஸ்மாக்' கடை இருந்ததால், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவியர், பள்ளிக்கு பீர் கொண்டு வந்து குடித்தது, அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 2,500 மாணவியர் படிக்கின்றனர். பிளஸ் 1 மாணவியருக்கு, நவ., 21ல் பருவத் தேர்வு நடந்தது. அப்போது, தேர்வுக்கு வந்த மாணவியரில் மூன்று பேர், மற்றொரு மாணவியின் பிறந்தநாளுக்காக மது அருந்தி மயங்கி விழுந்தனர். தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, நான்கு பேரையும், 'டிஸ்மிஸ்' செய்து, சான்றிதழ் கொடுத்து வெளியேற்றினார்.

இதுகுறித்து, மாவட்ட வருவாய் துறை மற்றும் கல்வி அதிகாரிகள் விசாரணை 
நடத்தியதில் கிடைத்த தகவல்கள்:நான்கு மாணவியரில், ஒருவருக்கு பிறந்த நாள். அவரிடம், 'பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும்' என, மற்ற மூன்று மாணவியர் கேட்க, 'என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பாயா?' என, அந்த மாணவி கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு, மூன்று மாணவியரும், சவால் விட்டு, 'வாங்கித் தருகிறோம்' என்றதும், அந்த மாணவி, 'எனக்கு பீர் வாங்கி வர வேண்டும்' என, கேட்டுள்ளார். அவர் விளையாட்டாக சொன்னதை, ஒரு மாணவி மட்டும் சீரியசாக எடுத்து கொண்டார்.

ஏனெனில், அவர் வீட்டுக்கு மிக அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் பணியாற்றும் சிலரும், குடிக்க வருவோரில் சிலரும், மாணவியின் வீடு அருகே அமர்ந்து, மாலை மற்றும் இரவு நேரங்களில் மது அருந்தி வந்துள்ளனர். அவர்கள் குடிப்பதை அருகில் நின்று அந்த மாணவி அடிக்கடி பார்த்ததுடன், அதைப்பற்றி தெரிந்து கொண்டுள்ளார். அதனால், சவாலை நிறைவேற்ற, டாஸ்மாக் கடைக்கு குடிக்க வந்த ஒருவரிடம் பணம் கொடுத்து பீர் பாட்டில் வாங்கி உள்ளார்.
அதை பள்ளிக்கு கொண்டு சென்ற போது, ஆசிரியர் வகுப்பறைக்கு வரவில்லை. அதனால், குளிர் பானம் வாங்கி வந்து, 'பார்ட்டி' கொண்டாட முடிவெடுத்தனர். 

எனினும், பிறந்த நாள் கொண்டாடிய மாணவி, விளையாட்டுக்கு சொன்னதாகவும், மது வேண்டாம் என்றும் கூறி விட்டார்; அவர் குடிக்கவில்லை.பீர் வாங்கி வந்த மாணவியின் பெற்றோர் கூலி தொழிலாளர்கள். மாணவியின் தாய், தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறார்; தந்தை, தறி நெய்யும் தொழிலுக்கு சென்று வருகிறார். அந்த மாணவிக்கு, ஒரு தங்கை உள்ளார். மாணவி பிளஸ் 1 வரை படித்ததால், பெற்றோரை அதட்டி, தான் படித்தவள் என்றும், தனக்கு எல்லாம் தெரியும் என்றும் கூறி, வீட்டு நிர்வாகத்தையும் கவனித்து வந்துள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்துள்ளது.



கைவிட்ட அதிகாரிகள்:




நாமக்கல் மாவட்டத்தில் நடந்து வரும் பாரதியார் தின மாநில விளையாட்டு போட்டிகள் மற்றும் தமிழக அரசின் மகா வேலை வாய்ப்பு முகாம் பணியில், ஆசிரியர்களும், மாவட்ட கலெக்டரும் மும்முரமாக உள்ளதால், நான்கு மாணவியரை,'டிஸ்மிஸ்' செய்ததுடன், தங்கள் கடமைகளை முடித்து கொண்டுள்ளனர். இந்த பணியில் அதிக ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளதால், சில வாரங்களாக பள்ளிக்கு பணிக்கு வரும் ஆசிரியர் எண்ணிக்கையும் குறைந்து, மாணவ, மாணவியரை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png