!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 3 டிசம்பர், 2015

திண்டுக்கல் அரசு செவிலியர் பள்ளி மாணவிகளுக்குள் மோதல்: அதிகாரிகள் சமாதான கூட்டம்
திண்டுக்கல் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் 3ம் ஆண்டு மாணவிகளுக்கும், 4ம் ஆண்டு மாணவிகளுக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர்.


திண்டுக்கல் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் 250 மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இவர்களுக்கு வசதியான தங்கும் அறைகள் இல்லை. கழிப்பறை, குளியல் அறைகளும் போதுமானதாக இல்லை. அடிக்கடி எலி கடியாலும் அவதிப்படுகின்றனர். குளியல் அறையை பயன்படுத்துவதில் 3ம் ஆண்டு மாணவிக்கும், 4ம் ஆண்டு மாணவிக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு மாணவிகளும் மோதிக் கொண்டனர். ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர். விடுதிக்கு வார்டன் இல்லாததால் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. முதல்வர் சித்ரா மாணவிகளை சமாதானப்படுத்தினார்.

மாணவிகளை சமாதானம் செய்து மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலா பேசியதாவது:சின்ன பிரச்னைக்கு சண்டையிடும் நீங்கள் எப்படி நோயாளிகளிடம் அன்பு காட்ட முடியும். இனிமேல் சண்டையிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன், என்றார்.

முதல்வர் சித்ரா கூறியதாவது: மாணவிகளுக்குள் வாய்த்தகராறுதான், கைகலப்பு எதுவும் ஏற்படவில்லை. யாருக்கும் காயமும் இல்லை. தற்போது அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர், என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png