!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

சனி, 12 டிசம்பர், 2015

ராமநாதபுரம் சத்துணவுத்துறையில் 8 மாதங்களில் 25 பேர் 'சஸ்பெண்ட்': ஊழியர்கள் போராட முடிவு

 ராமநாதபுரத்தில் 8 மாதங்களில் 25 சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து 4 மாவட்ட சத்துணவு ஊழியர்கள் போராட முடிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு மையங்களை கலெக்டர், அவரது நேர்முக உதவியாளர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற பொருட்களின் எடை குறைவு, பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது, சரியான நேரத்தில் பள்ளியில் இல்லாதது போன்ற காரணங்களுக்காக 8 மாதங்களில் 25 சத்துணவு ஊழியர்களை 'சஸ்பெண்ட்' செய்துள்ளனர். இதில் 19 பேரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆறு பேரின் 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்படவில்லை.இதை கண்டித்து சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் டிச., 14 ல் போராட்டம் நடக்கிறது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை மாவட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து வரும்போதே அரிசி, எண்ணெய், பருப்பின் எடை குறைகிறது. இதற்கு நாங்கள் காரணமில்லை. 

இதுகுறித்து முறையிட்டாலும் நடவடிக்கை இல்லை. எங்களின் பணி நேரத்திற்கு பின் ஆய்வு நடத்துகின்றனர். உள்நோக்கத்திற்காக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) நடவடிக்கை எடுக்கிறார். ஒரு ஊழியர் மீது 4 விதமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள் மன
உளைச்சலில் உள்ளனர், என்றனர்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கணபதி கூறுகையில், “குறைவான குழந்தைகளுக்கு உணவு வழங்கிவிட்டு, பள்ளியில் உள்ள அனைவரும் சாப்பிட்டதாக கணக்கு எழுதுகின்றனர். தவறு செய்வோர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உள்நோக்கம் எதுவும் கிடையாது,” என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png