!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 9 டிசம்பர், 2015

பள்ளிக்கரணையில் பள்ளி உதவி தலைமை ஆசிரியை கணவருடன் வெள்ளத்தில் மூழ்கி பலி
பள்ளிக்கரணையில் பள்ளி உதவி தலைமை ஆசிரியை கணவருடன் வெள்ளத்தில் மூழ்கி பலியானார்.

உதவி தலைமை ஆசிரியை
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ராஜாஜி அவென்யூவைச் சேர்ந்தவர் மருதநாயகம் (வயது 37). இவர் பள்ளிக்கரணையில் உள்ள மத்திய அரசின் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நிர்மலா புஷ்பம் (33). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களது சொந்த ஊர் தூத்துக்குடி ஆகும். இவர்களுக்கு 10 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

டெல்லியில் கடந்த 2–ந் தேதி சர்வதேச பள்ளிகள் கருத்தரங்கம் நடக்க இருந்தது. இதில், கலந்துகொள்ள நிர்மலா புஷ்பம் விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அவர் தனது கணவர் மருதநாயகத்துடன் சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 1–ந் தேதி இரவு வாடகை காரில் சென்றார். ஆனால் சென்னை விமானம் நிலையம் பலத்த மழையால் அன்று இரவு மூடப்பட்டது.
வீடு திரும்பியபோது பலி
இதையடுத்து இருவரும் விமான நிலையத்தில் இருந்து காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது பலத்த மழை பெய்ததால் கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு பகுதியில் வாடகை காரை நிறுத்திவிட்டு இறங்கினர்.
ஈச்சங்காடு பகுதியில் சாலைகளில் மழை வெள்ளம் ஓடியதால் இருவரும் வீட்டுக்கு நடந்து சென்றனர். அப்போது வெள்ளத்தில் இருவரும் அடித்து செல்லப்பட்டு மூழ்கி பலியாயினர்.
இருவரின் உடல்களும் 5 நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்டது. முதலில் இறந்தவர்கள் யார் என்பது பற்றிய விவரம் எதுவும் தெரியாமல் இருந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது இறந்தவர்கள் குறித்த மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தது.
இருவரின் உடல்களையும் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்–இன்ஸ்பெக்டர்கள் பிரபு, வள்ளியம்மாள், ரவி, பெருமாள் ஆகியோர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
குழந்தைகளின் நம்பிக்கை
இதனிடையே கணவன்–மனைவி 2 பேரும் எங்கு சென்றார்கள் என தெரியாமல் தேடிய உறவினர்கள் பள்ளிக்கரணையில் வெள்ளத்தில் மூழ்கி பலியான தகவல் அறிந்ததும் கதறி அழுதனர்.
அதே நேரம் பெற்றோர் இறந்தது தெரியாமல், டெல்லி சென்றவர்கள் வீடு வந்து விடுவார்கள் என மருதநாயகம்–நிர்மலா புஷ்பம் தம்பதியரின் 2 குழந்தைகளும் கூறியது அங்கிருந்தவர்கள் இடையே கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.
பின்னர் போலீசார், பிரேத பரிசோதனை செய்து உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் உடல்களும் அவர்களுடைய சொந்த ஊரான தூத்துக்குடிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.
வங்கி உதவியாளர் உயிரிழப்பு
இதுபோல் மேடவாக்கம் அருகே உள்ள கோவிலஞ்சேரியை சேர்ந்தவர் ராபர்ட் மோசஸ் பென்சிகா (32). இவர் அங்குள்ள வங்கி ஒன்றில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 1–ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அவரை காணவில்லை. இந்த நிலையில் மழைநீர் வடிந்ததும் சித்தாலபாக்கம் ஏரி அருகே ராபர்ட்டின் மோட்டார் சைக்கிள் கிடந்தது. கடந்த ஒரு வாரமாக தேடியும் ராபர்ட் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஏரியில் தேடினர். ஒரு வாரத்திற்கு பின்னர் ராபர்ட்டின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
20 உடல்கள் மீட்பு
பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ராபர்ட்டின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுவரை சென்னை புறநகர் பகுதிகளான நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தில் மூழ்கி பலியான 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png