சூடுபிடிக்காத பொங்கல் முன்பதிவு
மழை வெள்ளத்தில் சிக்கிய பலர், ஏற்கனவே சொந்த ஊருக்கு சென்று விட்டதால், அரசு விரைவு பஸ்களில், பொங்கல் முன்பதிவு சூடுபிடிக்கவில்லை. ஆம்னி பஸ் முன்பதிவு, டிச., 20ல் துவங்குகிறது. வரும், 2016 ஜன., 14ல் போகி; 15ல், பொங்கல் பண்டிகை வருகிறது. ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகைக்காக, ஜன., 13 முதல், ரயில், பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது, ரயில்களில், பொங்கல் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.சென்னையை புரட்டி போட்ட மழை வெள்ளத்தால், பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு ஏற்கனவே சென்று விட்டனர். நிலைமை சீராகி, தற்போது தான் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதனால், பொங்கலுக்கு மீண்டும் ஊருக்கு செல்வதில், பலருக்கும் விருப்பம் இல்லை.இதனால், அரசு விரைவு பஸ்களில் பொங்கல் முன்பதிவு இன்னும் சூடுபிடிக்கவில்லை. இன்னும், ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே, பொங்கல் பண்டிகைக்கு உள்ளது; எனினும், பாதி அளவு கூட, முன்பதிவு முடியவில்லை.ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கூறியதாவது:வழக்கமாக, பண்டிகைக்கு, ஒரு மாதத்திற்கு முன், முன்பதிவை துவக்குவோம். மழை பாதிப்பு உள்ளதால், இந்த முறை சற்று தாமதமாக துவக்க உள்ளோம். டிச., 20ல் முன்பதிவை துவக்கும்படி, அனைத்து டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும் தகவல்
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.