!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 16 டிசம்பர், 2015

அபாயம் ! : பள்ளி காம்பவுண்டு சுவர் இடிந்துவிழும்... : காவல் காக்கும் கட்டாயத்தில் நிர்வாகம்
திருப்புல்லாணி அருகே இடிந்துவிழும் தருவாயில் உள்ள காம்பவுண்டு சுவரின் அருகில் மாணவர்கள் செல்வதை தடுக்க காவல் காக்கவேண்டிய கட்டாயத் துக்கு பள்ளி நிர்வாகம் தள்ளப் பட்டுள்ளது.


திருப்புல்லாணி ஒன்றியத்திற் குட்பட்ட பனையடியேந்தலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இரு பள்ளிகளிலும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 11 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். பள்ளி வளாகத்தை சுற்றி 5 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. தரமற்ற கட்டுமானத்தால் காம்பவுண்டு சுவரின் ஒரு பகுதி இடிந்துவிழும தருவாயில் உள்ளது. சுவர் கீழே விழாமல் இருப்பதற்காக மீட்டருக்கு ஒன்று வீதம் 15 வேலிகற்களால் முட்டுகொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் எந்தநேரத்திலும் காம்பவுண்டு சுவர் கீழே சாயலாம் என்பதால் மாணவர்கள் அருகில் செல்லாமல் இருப்பதற்காக காவல் காக்கவேண்டிய கட்டாயம் பள்ளி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே காம்பவுண்டு சுவரை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால் ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் நிலை குலைந்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு அலட்சியம் செய்யாமல் இடியும் தருவாயில் உள்ள காம்பவுண்டு சுவரை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, அதே இடத்தில் தரமான கட்டுமானப் பணிகள் மூலம் புதிய சுவர் எழுப்ப கல்வித்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பனையடியேந்தல் ஊராட்சி தலைவர் வெள்ளி கூறுகையில், ""பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் தருவாயில் உள்ள காம்பவுண்டு சுவர், நீர்தேக்க தொட்டி ஆகியவற்றால் ஆபத்து உள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வி அலுவலர், ஒன்றிய அதிகாரிகளிடம் கிராமக் கல்விக்குழு, பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை,'' என்றார்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png