!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 28 டிசம்பர், 2015

தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் கோரிக்கை.

            ஒப்பந்தம் மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' என, மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

        தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநிலத் தலைவர் மணி தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊராட்சி, நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் டிபிஎப் கணக்குகளை, பொது வருங்கால வைப்பு நிதியாக மாற்றி உத்தரவு பிறப்பித்த, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. மேலும், 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஜாக்டோ சார்பில், ஜனவரி, 30, 31, பிப்ரவரி, 1 ஆகிய தேதிகளில் நடக்கும் மறியல் போராட்டத்தில், முழு அளவில் ஆசிரியர்களை பங்கேற்கச் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLSyP3X6HjgcTE7dZfLRhXt3XZvJ1RaXAvO2NaJ5AQHVRLaWoF__LghL92m_WDQADsVgmLimNbuABLdc4_VGRaTlJ7s5U_n5osYV8pz2B2_wDjJ1-brKe2xMw_I18lswhOUTR0NZ-DAQjE/s400/bttp-9.png