!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 29 டிசம்பர், 2015

தேர்தல் பணியின்போது பாதுகாப்பு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு,வசதிகளை செய்து தர வேண்டும் என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஏ.ஜோசப் சேவியர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலின் போது, ஓட்டுச்சாவடி மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில் தேர்தல் பணிக்காக ஆசிரியர், அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவர். 

தேர்தல் பணியில் தமிழக அளவில் 3 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். குறிப்பாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணிகளுக்கு, தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே பெரும்பாலும் நியமிக்கப்படுவர்.பெண் ஆசிரியர்கள் அவதிஇதில், 80 சதவீதத்தினர் பெண் ஆசிரியர்கள்.ஓட்டுப்பதிவன்றும், அதற்கு முதல் நாளும் ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும். அங்கு, அடிப்படை வசதி முழுமையாக ஏற்படுத்துவதில்லை. பெண் ஆசிரியர்கள் தங்க உரிய பாதுகாப்பு இல்லை. மேலும், ஓட்டுப்பதிவிற்கு பின், ஓட்டுப்பெட்டிகளை ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்ல உரிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. ஓட்டுப்பெட்டியை விட்டு நகர முடியாத நிலை 
ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது. மேலும், ஆசிரியர்களை 100 கி.மீ.,க்கு அப்பால் உள்ள ஓட்டுச்சாவடிகளில் நியமிக்கின்றனர். இதனால், பெண் ஆசிரியர்கள் இரவில் அங்கு செல்ல பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.
எனவே, தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு, ஓட்டுச்சாவடிகளில் தங்க வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இதை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கலெக்டர்களிடம் மனு அளித்து வருகிறோம். அந்த வகையில், சிவகங்கை கலெக்டர் மலர்விழியிடம் மனு அளித்துள்ளோம், என்றார்.


Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png