!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 9 டிசம்பர், 2015

அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பொருந்தும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், வீட்டு மின் உபயோகிப்பாளர்கள், மின் கட்டணத்தை, 2016 ஜனவரி, 31ம் தேதிக்குள் செலுத்தலாம்; அபராதம் கிடையாது

* டிச., 7ம் தேதி முதல் நடக்கவிருந்த, அரையாண்டு தேர்வுகள், ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது; இது, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்.

* குப்பை அகற்றும் பணயில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்களுக்கு, தடுப்பூசி போடப்படும். பாதுகாப்பு முக கவசம், கையுறை, மழை கோட், 'கம்யூட்ஸ்' வழங்கப்படும்

* வெள்ளம் பாதித்த வீடுகளுக்கு, தலா அரை கிலோ பிளீச்சிங் பவுடர், தண்ணீரை சுத்தம் செய்ய, 20 குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும். மொத்தம், 2,000 டன் பிளீச்சிங் பவுடர்; 1 கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும்

* வெள்ள பகுதிகளில் நடத்தப்படும், 1,105 மருத்துவ முகாம்கள் தொடரும்
* மலிவு விலை காய்கறிக் கடைகளில், உருளைக் கிழங்கு, கிலோ, 23 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; வெளிச்சந்தையில் கிலோ, 45 ரூபாய். எனவே, கூடுதலாக, 100 டன் உருளைக் கிழங்கு, 75 டன் வெங்காயம் கொள்முதல் செய்து, விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கட்டண விலக்கு ஜெ.,க்கு கோரிக்கை: 
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலுார் மாவட்ட மின் நுகர்வோர், அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த, ஜன., 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தண்ணீர் புகுந்த வீடுகளில் பலர், உடைமைகளை இழந்து, நடுத்தெருவில் நிற்கின்றனர். 

அவர்கள், மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க, முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png