!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

புதன், 30 டிசம்பர், 2015

யூரியா போன்ற பொருட்களுக்கு வழங்கப்படும்

 மானியத்திலும் மத்திய அரசு கைவைக்கலாம் 

சமையல் காஸ் சிலிண்டரை மானிய விலையில் பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கத் துவங்கியுள்ள மத்திய அரசு, அடுத்ததாக, மண்ணெண்ணெய், யூரியா போன்ற பொருட்களிலும் கைவைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


பெட்ரோல், டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் மற்றும் யூரியா போன்றவற்றை மானிய விலையில் அளிக்க, பல லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டு வருகிறது; இதனால், பெரியளவில் நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என, சில ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு அறிவித்தது. இதனால், மத்திய அரசுக்கு பெரியளவில் நிதிச்சுமை குறைந்தது. இதைத் தொடர்ந்து, சமையல் காஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் நேரடி பணப் பட்டுவாடா திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதனால், பல லட்சம் போலி நுகர்வோர் களையெடுக்கப்பட்டனர். வசதி படைத்தநுகர்வோர், தாமாக முன்வந்து மானியத்தை கைவிட வேண்டுமென மத்திய அரசு விடுத்த கோரிக்கையை, 57 லட்சம் பேர் ஏற்றதால், அரசுக்கு, சில ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமானது.

இந்நிலையில், அரசின் நிதிச்சுமையை மேலும் குறைக்கும் நோக்கில், 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ள நுகர்வோருக்கு, புத்தாண்டு முதல், மானிய விலையில் சமையல் காஸ் வழங்கப்படாது என, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்தியஅரசின் அதிரடி நடவடிக்கையால் மேலும் சில லட்சம் நுகர்வோர், மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்களை வாங்க முடியாமல் போகும். இதனால், சில ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் மானிய குறைப்பு நடவடிக்கைகளால், நடப்புக் கணக்கு பற்றாக்குறை வெகுவாக குறையும் என கருத்து தெரிவித்துள்ள பொருளாதார நிபுணர்கள், அடுத்த கட்டமாக, மண்ணெண்ணெய், யூரியா போன்ற பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்திலும் மத்திய அரசு கைவைக்கலாம் என கருதுகின்றனர்.

குழப்பமான நடைமுறை:
மண்ணெண்ணெய் மீதான மானியங்களை குறைப்பது அத்தனை எளிதல்ல என்ற கருத்து நிலவுகிறது. தற்போதுள்ள நடைமுறைப்படி, மண்ணெண்ணெய் மானியத் தொகையை, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது.மாநில அரசுகள், நுகர்வோருக்கு மானிய விலையில் மண்ணெண்ணெயை வழங்குகின்றன. இதனால், மண்ணெண்ணெய்க்கானமானிய நடைமுறை, குழப்பமும் சிக்கலும் நிறைந்ததாக உள்ளது.இதுகுறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'மண்ணெண்ணெய் மானியத்தை முறைப்படுத்துவதற்கான பேச்சை, ம.பி., ஆந்திரா உள்ளிட்ட சில மாநில அரசுகளுடன் மத்திய அரசு துவக்கி உள்ளது' என, கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
யூரியாவுக்கு ரூ.73,000 கோடி:
யூரியாவை பொறுத்தவரை, 2005 - 06ல், 18 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக இருந்த மானியம், 2015 - 16ம் நிதியாண்டில், 73 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்யும், 'கிரிசில்' நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர், டி.கே.ஜோஷி, யூரியாவுக்கு வழங்கப்படும் மானியத்தை கண்டிப்பாக முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். யூரியாவின் விலையில், 75 சதவீதம் மானியமாக தரப்பட்டு வருகிறது. தேவையற்ற மானியங்களை குறைப்பதால் கிடைக்கும் நிதியை, நலிவடைந்த பிரிவினருக்கு செலவிட வேண்டுமென, பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.


மத்திய அரசின் மானியம்: 
வகை - 2014 - 15 நிதியாண்டு
(ரூபாய் / கோடியில்)
யூரியா - 38,038
பிற உரம் - 29,301
உணவு - 92,000
பெட்ரோலியம் - 85,378
வட்டி - 8,137
பிற - 1,778
மொத்தம் - 2,54,632

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png