!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 14 டிசம்பர், 2015

பள்ளி கட்டட சீரமைப்பு பணியில் தொய்வு:அரசு பள்ளிகளில் மழைநீர் தேக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில், கனமழை விடுமுறைக்கு பின், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ளன. இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி வளாகங்களில், மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளது. இவைதவிர சேதமடைந்த பள்ளி கட்டடங்களை சீரமைப்பதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 1,406 தொடக்கப் பள்ளிகள், 360 நடுநிலைப் பள்ளிகள்,, 283 உயர்நிலைப் பள்ளிகள், 287 மேனிலைப் பள்ளிகள் என, மொத்தம், 2,336 பள்ளிகள் உள்ளன.
கடந்த மாதம், 9ம் தேதி முதல், இம்மாதம் 5ம் தேதி வரை பெய்த கனமழையால், அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியாக இருந்தது. மேலும் கட்டடங்கள் பழுதாகி இருந்தன. இதனால், மாவட்ட நிர்வாகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, நேற்று வரை தொடர் விடுமுறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், விடுமுறைக்கு பின், இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. ஆனால், பெரும்பாலான பள்ளி வளாகங்களில், மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், சில பள்ளி வளாகங்கள் சேறும், சகதியுமாக உள்ளன. மழையால் சேதம் அடைந்த கட்டடங்களை பழுது பார்க்கும் பணியும் நடந்து வருகிறது.
இதனால், மாணவர்கள் இன்றும் பள்ளிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட, 142 பள்ளிகளில், 32 பள்ளிகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன
திருவள்ளூர் ஒன்றியம் மற்றும் நகராட்சிக்குட்பட்ட, 120 பள்ளிகளில், 25 பள்ளிகள் சேறும், சகதியுமாக உள்ளன
●  திருத்தணி கோட்டத்தில், 283 பள்ளிகளில், 35க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக உள்ளது
சோழவரம் ஒன்றியத்தில் உள்ள 25 பள்ளிகளில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளது
பள்ளங்களை மூடுவதற்காக கொண்டு வரப்பட்ட தொழிற்சாலை கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு இடையூறாக உள்ளது
பொன்னேரி பாரதி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியின் நுழைவாயிலில், பாலம் உடைந்ததால், சிமென்ட உருளைகள் மூலம் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது
பொன்னேரி, திருவேங்கிடபுரம் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டு, அங்கு செம்மண் கொட்டப்பட்டு உள்ளது
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், செங்கட்டானுார் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி வளாகத்தை சுற்றி தேங்கியிருந்த மழைநீர், மூன்று நாட்களாக மின்மோட்டார் மூலம் அகற்றப்பட்டு வந்தது. இருந்தும் பள்ளியின் முன் பகுதியில் கடல் போல் மழைநீர் தேங்கியுள்ளது
பீமாரெட்டியூர் சாலையை ஒட்டி, தண்ணீர் தேங்கியுள்ளதால், மாணவர்கள் இதில் இறங்கும் அபாயநிலை உள்ளது
சின்னநாகபூண்டி அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. வகுப்பறையில் இருந்து மூன்று அடி துாரத்தில் தண்ணீர் உள்ளது
சொரக்காய்பேட்டை கொற்றலை ஆற்றங்கரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர், வெள்ளத்தால் உடைந்து விழுந்தது. இதுவரை சீரமைக்கப்படவில்லை.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், ''அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நாளை (இன்று) திறக்கப்படும். மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக உள்ள பள்ளிகளில், தொடர்ந்து, சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை கண்காணிக்க ஒரு குழுவும் அமைத்துள்ளோம். பள்ளி வளாகங்களில் மண் கொட்டியும் வருகிறோம். நாளை (இன்று) காலைக்குள் மழைநீரை அகற்றி சீரமைக்கப்படும்,'' என்றார்.நமது நிருபர் குழு

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png