!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 28 டிசம்பர், 2015

'மெட்ராஸ் ஐகோர்ட்' பெயர் மாறுமா?
உயர் நீதிமன்றங்களின் பெயரை மாற்ற, தனித் தனியாக சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பதால், பெயர் மாற்றும் அதிகாரத்தை, ஜனாதிபதிக்கு வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பிரிட்டன் ராணி உத்தரவில், இந்தியாவில் மெட்ராஸ், பம்பாய், கோல்கட்டா ஆகிய பெருநகரங்களில், உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. 1860ல் அமைக்கப்பட்ட, இந்த உயர் நீதிமன்றங்கள், 'சார்ட்டர்ட் ஐகோர்ட்' என அழைக்கப்படுகின்றன.


1995 வரை...தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் அடங்கிய, மெட்ராஸ் மாகாணத்தின் உயர் நீதிமன்றமாக, மெட்ராஸ் ஐகோர்ட் விளங்கியது. நாடு சுதந்திரம் பெற்ற பின், 1995 வரை, மெட்ராஸ் என்றே, சென்னை அறியப்பட்டது. அதன்பின், சென்னை என பெயர் மாற்றம் பெற்றது.

ஆனால், உயர் நீதிமன்றத்தின் பெயர், இன்னும், 'மெட்ராஸ் ஐகோர்ட்' என்றே நீடிக்கிறது. இதை சென்னை ஐகோர்ட் என, பெயர் மாற்றம் செய்ய, தமிழக அரசியல் கட்சியினரும், வழக்கறிஞர்களும், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேபோல பம்பாய், மும்பை என பெயர் மாற்றம் பெற்ற போதிலும், அங்குள்ள உயர் நீதிமன்றத்தின் பெயர், இன்னும் பம்பாய் ஐகோர்ட் என்றே அழைக்கப்படுகிறது. அந்த உயர் நீதிமன்றத்தின் பெயரையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை கள் எழுந்துள்ளன.இதையடுத்து, மெட்ராஸ் ஐகோர்ட் என்ற பெயரை, சென்னை ஐகோர்ட் எனவும், பம்பாய் ஐகோர்ட்டின் பெயரை, மும்பை ஐகோர்ட் எனவும் மாற்ற, சட்டம் இயற்றுவது என, மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த சட்ட தயாரிப்பு பணிகளில், மத்திய சட்ட அமைச்சகம் இறங்கியபோது, தற்போது கோல்கட்டா என பெயர் மாற்றம் பெற்றுள்ள, கல்கத்தாவில் உள்ள ஐகோர்ட்டின் பெயரையும் மாற்ற கோரிக்கை எழுந்தது. அதேபோல, ஒடிஸா என பெயர் மாறியுள்ள, ஒரிஸா மாநில உயர் நீதிமன்றத்தின் பெயரையும், மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இப்படி, ஒவ்வொரு உயர் நீதிமன்றத்தின் பெயரையும் மாற்றுவதற்கு, தனித்தனியாக சட்டங்கள் இயற்ற வேண்டி வரும் என்பதால், உயர் நீதிமன்றங்களின் பெயரை மாற்றுவதற்கு, ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கி, சட்டம் இயற்றி விடலாம் என, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு அதிகாரம்:இதன்படி, உயர் நீதிமன்றத்தின் பெயர் மாற்றக் கோரி வரும் முறையீடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுடனும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடனும் கலந்து பேசி முடிவெடுக்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபரில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, இன்னும் சட்ட வடிவம் பெறவில்லை. எனவே, இது சம்பந்தமாக பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றி, 'மெட்ராஸ் ஐகோர்ட்' பெயரை, 'சென்னை உயர் நீதிமன்றம்' என மாற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வழக்கறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png