!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வியாழன், 21 ஜனவரி, 2016

பெயரில்லாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ராஜேஷ் லக்கானி

நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில், 5.79 கோடி வாக்காளர்கள், வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்கவுள்ளனர். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களில், எட்டு லட்சம் பேருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நேற்று கூறியதாவது:

தமிழகம் முழுவதும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இந்த ஆண்டு புதிதாக, 12.33 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில், எட்டு லட்சம் பேர், அலைபேசி எண்ணை கொடுத்திருந்தனர். அவர்களுக்கு, பெயர் சேர்க்கப்பட்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களுக்கு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளது. இவை, பிப்., 10 முதல், ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம், வீடு வீடாக வழங்கப்படும். வாக்காளர் பட்டியல், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், பார்வைக்கு வைக்கப்படும். பட்டியலில், பெயர் இல்லாதவர்கள் பெயர் சேர்க்க, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இளம் வயது வாக்காளர்கள்நேற்று வெளியான வாக்காளர் பட்டியலில், 6.14 லட்சம் பேர், 18 - 19 வயதிற்குட்பட்டவர்கள். இவர்கள், முதன் முறையாக, தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png