!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 25 ஜனவரி, 2016

பாடங்களை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறல்! பொதுத் தேர்வில் தேர்ச்சி குறையும் அபாயம்
 கனமழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்களை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிக்கு வரும்படி அழைத்தும் மாணவர்கள் பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை தராததால், ஆசியர்கள் பாடங்களை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால், இந்த ஆண்டு கல்வித்தரம் இன்னும் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.



கடலுார் மாவட்டத்தில் 291 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், 130 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவ மழையின் போது 2 கட்டமாக கடலுார் மாவட்டம் கனமழையால் பெரும் பாதிப்பிற்குள்ளானது. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டதோடு, பெரும்பாலான மாணவர்கள் புத்தகங்களை இழந்தனர்.

இதன்காரணமாக டிசம்பர் மாதத்தில் துவங்கி முடிய வேண்டிய அரையாண்டு தேர்வு ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே டிசம்பர் மாத இறுதியில் 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து ஒரு வாரம் கழித்து கடந்த 11ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு துவங்கி 27ம் தேதி முடிவடைகிறது.

மார்ச் 4ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டு விட்டதால் அரையாண்டு தேர்வு முடிந்த கையோடு அடுத்த வாரத்தில் செய்முறை தேர்வும் துவங்கப்படவுள்ளது. பிளஸ் 2 வகுப்பை பொறுத்தவரை திருப்புதல் தேர்வு போன்றவைக் கூட நடத்த முடியாத நிலையில் ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் ஆசிரியர்கள் பாடங்களை முடிப்பதற்காகவும், மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சிறப்பு வகுப்புகளை நடத்தி பாடங்களை முடிக்க ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டு, மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வருகை தருமாறு அழைத்தும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை தருவதில்லை. 50 மாணவர்கள் உள்ள வகுப்பில் 15 மாணவர்கள் மட்டுமே வருகை தருகின்றனர்.
மாணவர்களின் அரையாண்டு தேர்வுத் தாள்களைத் திருத்தும் போது சிறந்த முறையில் படிக்கும் மாணவர்கள் கூட சரியாக தேர்வு எழுதவில்லை என விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கனமழை காரணமாக அரசு ஏதாவது உதவுமா என்ற மனநிலைக்கு மாணவர்கள் தயாராகி விட்டனர். ஏற்கனவே கடலுார் மாவட்டம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கடைசி 4 இடங்களில் அல்லாடி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு கல்வித்தரம் இன்னும் பின்னுக்கு தள்ளப்படுமோ என்கிற அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png