!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 22 ஜனவரி, 2016

வாடகை வீட்டில் குடியிருக்க விரும்பாத அரசு ஊழியர்கள்

'அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்ட, தமிழக அரசு தேவையான கடன் வழங்கியதால், வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை,'' என, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

மார்க்சிஸ்ட் - டில்லிபாபு: அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, வாடகை குடியிருப்பு கட்டிக் கொடுக்க அரசு முன்வருமா?வைத்திலிங்கம்: ஆறாவது ஊதியக் குழு மூலம் கிடைத்த சம்பள உயர்வு மற்றும் தமிழக அரசு வழங்கிய வீட்டுக்கடன் ஆகியவற்றால், அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்டி குடியேறி 
வருகின்றனர். வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை. இதனால், சென்னை, கோவையைத் தவிர, பிற பகுதிகளில், அரசின் வாடகைக் குடியிருப்புகள் காலியாக உள்ளன. எனவே, புதிதாக வாடகை குடியிருப்புகள் கட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்படவில்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png