!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

1௦ம் வகுப்பு பொதுத்தேர்வுபிறமொழி மாணவருக்கு தமிழ் நீக்கம்

தமிழகத்தில் மார்ச் 15ல் துவங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பிறமொழியை தாய்மொழியாக கொண்ட 7,000 மாணவர்கள் தமிழ் பாடத்தை இந்த ஆண்டு முதல் கட்டாய பாடமாகவும், தங்களின் தாய்மொழியை விருப்ப பாடமாகவும் எழுத தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான சட்டம் 2006ல் பிறப்பிக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மொழி சிறுபான்மையினர் பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் தமிழ் கட்டாய பாடத்துக்கு தடை விதித்தது.இதற்கு பின்னும் தேர்வுத் துறையிலிருந்து பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் பிறமொழி மாணவர்களுக்கான பதிவு எண் பட்டியலில் 'எந்த காரணத்தை கொண்டும் ஏற்கனவே பதிவு செய்த பாட விவரங்களை மாற்றக் கூடாது' என உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதையறிந்த மொழி சிறுபான்மை அமைப்பினர் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தேர்வுத் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளாவதை தடுக்க தேர்வுத் துறை சார்பில் அவசர அவசரமாக பிறமொழி மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மாணவர்களின் பாட பட்டியலை மாற்ற உத்தரவிடப்பட்டது.இதையடுத்து அந்த பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் பிறமொழி மாணவர்களின் பாட பட்டியலில் இருந்து தமிழ் பாடம் நீக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த மாணவர்களுக்கு புதிய 'ஹால் டிக்கெட்' வழங்க ஏற்பாடு நடக்கிறது

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png