!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

விருதுநகரில் 1403 ஆசிரியர்கள் கைது:பாடம் நடத்தாமலே இயங்கிய பள்ளிகள்
 தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் விருதுநகரில் நடந்த மறியல் போராட்டத்தில் 1403 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,பாடம் நடத்தாமலே பள்ளிகள் இயங்க மாணவர்கள் பாதித்தனர்.ஆறாவது ஊதிய குழுவில் மத்தியரசு உயர்த்தி வழங்கி உள்ள அனைத்து படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கம் செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்து உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன.,30 முதல் தொடர் மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் சந்தான கிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தனர். இதில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி போது, 30 ஆசிரியர்கள் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்கள் உட்பட 1403 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

சாப்பிட மறுப்பு
சாலை மறியலில் ஈடுப்பட்டு கைதான 30 ஆசிரியர்கள் போலீஸ் கண்ட்ரோல் ரூமில் வைத்திருந்தனர். மற்ற ஆசிரியர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மண்டபத்தில் உள்ளவர்களுக்கு மதிய சாப்பாடு வழங்கப்பட்ட நிலையில்,போலீஸ் கண்ட்ரோல் ரூமில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களை அனுப்பினால் தான் சாப்பிடுவோம் எனக்கூறினர். அதன்படி ஆசிரியர்கள் 30 பேரும் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

பாதித்த மாணவர்கள் :ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகள் இயங்கினாலும், ஆசிரியர்கள் இல்லாமல் பாடங்கள் நடத்தப்படாது மாணவர்கள் பாதித்தனர். மாவட்டத்தில் 116 உயர்நிலை, 153 மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே பணியிலிருந்தனர். ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். 1194 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்ததால் ஆசிரியர் பயிற்றுனர்கள், சத்துணவு அமைப்பாளர்களை கொண்டு பள்ளிகள் இயங்கியது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி,"" உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்படவில்லை. தொடக்க , நடு நிலை பள்ளிகளில் ஆசிரியர் பயிற்றுனர், சத்துணவு அமைப்பாளர்களை கொண்டு பள்ளிகள் செயல்பட்டன ,'' என்றார்.

திறக்கப்படாத பள்ளிகள்:ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் வட்டார வளமைய பயிற்றுனர்கள், சத்துணவு அமைப்பாளர்களை கொண்டு பள்ளிகளை இயங்கினாலும், 20 சதவீத பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பிற்கு வரவில்லை. கிராம பள்ளிகளில் மிக குறைந்தளவே மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.இதனால் விருதுநகர் செந்தி குமார நாடார் மீனாட்சி நடு நிலைப்பள்ளி உட்பட ஒரு சில பள்ளிகள் பூட்டப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png